அரசு ஊழியர்களுக்கு 5 லட்சமாக உயர்ந்தப்பட்ட நிதி! பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அரசாணை!
தமிழக அரசின் பட்ஜெட்டில் தற்போது ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அது பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதி, முன்பு மூன்று லட்சத்தில் இருந்தது. தற்போது அதை 5 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. அதன்படி இனி குடும்ப பாதுகாப்பு நிதியை ஐந்து லட்சமாக உயர்த்தி தமிழக அரசு ஒரு அரசாணையை தற்போது வெளியிட்டுள்ளது.
இதை தொடர்ந்து செப்டம்பர் மாதம் முதல் ஊழியர்களுக்கு பிடித்தம் ரூபாய் 60 லிருந்து ருபாய் 110 ஆக உயரும் எனவும் அரசு அறிவித்துள்ளது. இந்த பிடித்தம் ஒவ்வொரு ஊழியருக்கும் முன்பு மாதத்தில் 60 ரூபாய் பிடிப்பதாக இருந்தது. தற்போது அதை அதிகரித்து அந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களுக்கும், மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு தற்போது பல்வேறு திட்டங்களை மக்களுக்கு பயன்படும் வகையில் செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.