Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கிணற்றில் நச்சு வாயு தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி!

5 members died due to poisonous gas

5 members died due to poisonous gas

கிணற்றில் நச்சு வாயு தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி!

சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் கிணற்றுக்குள் இறங்கிய போது நச்சு காற்றை சுவாசித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

பிர்ரா காவல் நிலைய எல்லைக்குள் வரும் கிகிர்டா கிராமத்தில் இன்று காலை இந்த சோக சம்பவம் நடைபெற்றதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் யாரென அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் உயிரிழந்தவர்கள் ராம்சந்திர ஜெய்ஸ்வால், ரமேஷ் படேல், ராஜேந்திர படேல், ஜிதேந்திரா படேல் மற்றும் திகேஷ்வர் சந்திரா என அடையாளம் காணப்பட்டதாக காவல்துறை ஆய்வாளர் சஞ்சீவ் சுக்லா தெரிவித்தார்.

காவல்துறை அளித்த தகவலின் படி முதலில் ஜெய்ஸ்வால் கிணற்றில் விழுந்த மரக்கட்டையை எடுக்க கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். உள்ளே சென்ற அவர் மயக்கமடைந்த நிலையில் உதவிக்காக ​​​​அவரது குடும்ப உறுப்பினர் கூப்பிட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து படேல் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் மூன்று பேர் கிணற்றுக்குள் இறங்கியுள்ளனர்.

அவர்களும் மயங்கிய நிலையில் 5 வது நபராக சந்திரா என்பவர் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து உள்ளே சென்ற 5 பேரும் வெளியே வராத நிலையில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பார்த்ததில் கிணற்றுக்குள் இறங்கிய 5 பேரும் விஷ வாயு தாக்கி உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது.

Exit mobile version