Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கார்த்திகை தீபத் திருநாள் அன்று செய்யவே கூடாத 5 தவறுகள்!!

#image_title

கார்த்திகை தீபத் திருநாள் அன்று செய்யவே கூடாத 5 தவறுகள்!!

தீபத் திருநாளானது தமிழ் வருடத்தில் கார்த்திகை மாதத்தில் வரக் கூடிய ஒன்றாகும். இந்த நன்னாளில் நம் அனைவரது வீட்டிலும் தீபம் ஏற்றி வழிபடுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். தீப ஒளியால் நம் வீடு ஜொலிக்கும் இந்த நாளில் சில தவறுகளை நாம் செய்யவே கூடாது.

கார்த்திகை தீபத் திருநாள் அன்று செய்யவே கூடாத 5 தவறுகள்:-

**கார்த்திகை தீபத்தன்று வீட்டில் உள்ள பெண்கள் மாதவிலக்கு ஆகிவிட்டார்கள் என்றால் அவர்கள் விளக்கு ஏற்றலாமா? இல்லை ஏற்றக் கூடாதா? என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கும். இந்த நாளில் பெண்கள் மாதவிலக்கு ஆகிவிட்டார்கள் என்றால் வீட்டில் யாரும் இல்லாத பட்சத்தில் அவர்கள் பக்கத்து வீட்டு ஆட்களை வைத்து தீபம் ஏற்றலாம். அப்படி யாரும் இல்லை அல்லது வரமாட்டார்கள் என்றால் மாதவிலக்கு அடைந்த பெண்களே கடைகளில் விளக்கு, திரி, எண்ணெய் உள்ளிட்டவற்றை வாங்கி வந்து தீபம் ஏற்றலாம். ஒருபோதும் பூஜை அறைக்குள் இருக்கும் விளக்கை பயன்படுத்தக் கூடாது. அதேபோல் நீங்கள் நீங்கள் கடையில் இருந்து வாங்கி வந்த விளக்கை பூஜை அறைக்குள் வைத்து பயன்படுத்தக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

**இந்த தீப நாளில் வீட்டை பூட்டி விட்டு கோயில் தளங்களுக்கோ, வேறு எங்கும் செல்லக் கூடாது. வீடு தீபம் ஏற்றாமல் இருளில் கிடகக் கூடாது. வீட்டில் 1 விளக்காவது வைத்து தீபம் ஏற்ற வேண்டும். ஒருவேளை வெளியில் செல்லும் நிலை ஏற்பட்டால் உறவினர்கள் அல்லது அக்கம்பக்கத்தினரிடம் சொல்லி வீட்டின் முன் விளக்கேற்ற வையுங்கள்.

**கார்த்திகை தீபம் இன்று ஞாயிற்று கிழமை நாளில் வந்திருப்பதால் மாலை விளக்கு வைத்து விட்டு கறி உண்ணலாம் என்று நினைக்காதீர்கள். அதேபோல் வீட்டில் தானே அசைவம் சமைத்து சாப்பிடக் கூடாது. வெளியில் சென்று சாப்பிடலாம் என்றும் நினைக்காதீர்கள். தீபத் திருநாள் அன்று அசைவத்தை கையில் தீண்டவே கூடாது.

**உங்கள் வீட்டில் மின் விளக்கு இருந்தாலும் கட்டாயம் தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றுவதற்கு முன் வீட்டை சுத்தமாக துடைக்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.

**அதேபோல் தீபம் ஏற்றுவதற்காக பொருட்கள் வாங்க கடைக்கு செல்வதற்கு முன் தலைக்கு குளித்து தங்களை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். குளிக்காமல் பூஜை பொருட்களையோ, தீபம் ஏற்றுவதற்கான பொருட்களையோ தொடக் கூடாது.

Exit mobile version