Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

UPI சேவையில் மேலும் 5 முக்கிய மாற்றங்கள்!! ஆர்பிஐ அறிவிப்பு!!

5 more important changes in UPI service!! RBI Announcement!!

5 more important changes in UPI service!! RBI Announcement!!

இந்தியன் ரிசர்வ் வங்கியானது யுபிஐ சேவையில் மேலும் 5 முக்கிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே யுபிஐ லைட்டில் மூன்று மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட நிலையில் தற்பொழுது மீண்டும் புதிதாக சில மாற்றங்கள் அறிவிப்பு.

யுபிஐ 123பே சேவையில் கொண்டுவரப்பட்ட முக்கிய மாற்றங்கள் :-

✓ முதல் மற்றும் முக்கிய மாற்றம் யுபிஐ 123பே சேவைக்கான பரிவர்த்தனை வரம்பானது இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.5,000 இல் இருந்து ரூ.10,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

✓ யுபிஐ 123பே சேவையில் தற்போது ஆதார் அட்டை அடிப்படையிலான ஒடிபி அங்கீகாரம் (Aadhaar-based OTP authentication) சேர்க்கப்பட்டுள்ளது. இது யுபிஐ 123பே சேவைக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும்.

✓ அடுத்ததாக யுபிஐ 123பே சேவையின் டேக்கிங் தரப்படுத்ப்பட்டுள்ளது. இதன்கீழ் ட்ராக்கிங் மற்றும் ரிப்போர்ட்டிங்காக (tracking and reporting) புதிய (86) பர்போஸ் கோட் (Purpose code) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

✓ யுபிஐ 123பே சேவையின் இனிஷியேஷன் மோட்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தற்போது ஐவிஆர் (IVR), மிஸ்டு கால்கள் (Missed calls), ஃபீச்சர் போன் ஆப்கள் (Feature phone apps) மற்றும் சவுண்ட்-பேஸ்டு டெக்னாலஜி (Sound-based technology) ஆகியவைகளின் கீழ் பணபரிமாற்ற செயல்முறையை தொடங்கலாம்.

✓ கடைசியாக பணம் செலுத்துவதை இன்னும் எளிதாக்கும் வண்ணம் யுபிஐ நியூமெரிக் ஐடி மேப்பர் (UPI numeric ID mapper) ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது

முன்னரே குறிப்பிட்டபடி, மேற்கண்ட அனைத்து மாற்றங்களும் யுபிஐ 123பே சேவையில் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

அறியாதோர்களுக்கு யுபிஐ 123பே என்பது ஃபீச்சர் மொபை போன் பயனர்களுக்கு இணைய இணைப்பு இல்லாமல் யுபிஐ பரிவர்த்தனைகளை செய்ய உதவும் ஒரு சேவையாகும். அதாவது சிறிய அளவிலான தொகைகளை பின் நம்பர் இல்லாமல் அனுப்ப உதவும் யுபிஐ லைட் சேவையை போல இது ஃபீச்சர் போன் பயனர்களுக்கான சேவையாகும்.

Exit mobile version