Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கந்து வட்டி கொடுமையால் இளம் ஜோடிகளுக்கு நேர்ந்த சோகம்!

விழுப்புரம் அருகே மூன்று குழந்தைகளை கொன்றுவிட்டு கணவன்-மனைவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

விழுப்புரம் அருகே இருக்கின்ற வளவனூர் ஊரில் உள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன், இவர் மரக்கடை வைத்து இருக்கின்றார் இன்று காலை நீண்ட நேரமாக கடை திறக்காத காரணத்தால், பணியாளர்கள் அவருடைய வீட்டுக்கு சென்று இருக்கிறார்கள் கதவு உட்புறமாக தாழ்ப்பாள் போட்டு இருந்த காரணத்தால், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே போய் பார்த்தபோது மோகன் தன்னுடைய குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது.

மோகன் அவர்களும் அவருடைய மனைவியும் தனித்தனியாக தூக்கில் தொங்கிய நிலையிலும், விமலாஸ்ரீ மற்றும் ராஜஸ்ரீ சிவபாலன், என்ற அவர்களுடைய மூன்று குழந்தைகளும் ஒரே சேலையில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்து இருக்கிறார்கள் இதனை தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், 5 பேரின் உடலையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நோய் தொற்று காரணமாக, ஊரடங்கில் மூடப்பட்ட கடையை சமீபத்தில் இருந்திருக்கின்றார் மோகன், இதற்கிடையே வேலை இல்லாத காரணத்தால், கடன்வாங்கி குடும்பம் நடத்தி வந்திருக்கின்றார். கந்துவட்டிக்கு கடன் வாங்கியதாகவும், வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாத காரணத்தால் மோகன் அவர்களுக்கு நெருக்கடி அதிகரித்ததாகவும், தெரிகின்றது. அதன் காரணமாக மோகன் தன்னுடைய குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார்கள். ஸ்ரீராம் நிதி நிறுவனத்தில் மோகன் அவர்கள் கடன் வாங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையிலே சட்டவிரோதமாக மிரட்டி பணம் வசூல் செய்த நிதி நிறுவனத்தின் மேல் வழக்கு பதிவு செய்ய வேண்டும், கந்துவட்டி தடுப்பு சட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்று விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்திருக்கின்றார்.

Exit mobile version