5 பவுன் தங்க சங்கிலி.. இன்னோவா கார்!! அதிமுக முன்னாள் அமைச்சரின் தடபுடலான தேர்தல் கிப்ட்!!

0
205
5 pound gold chain.. Innova car!! AIADMK Ex-Minister's Troubled Election Gift!!

5 பவுன் தங்க சங்கிலி.. இன்னோவா கார்!! அதிமுக முன்னாள் அமைச்சரின் தடபுடலான தேர்தல் கிப்ட்!!

இந்த நாடாளுமன்ற தேர்தலானது தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.இதில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர்.ஆளும் கட்சி எதிர்க்கட்சி என அனைத்து தலைவர்களும் நேரடியாக களத்தில் இறங்கி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்து வருகின்றனர்.அந்த வகையில் பாஜக தனது வெற்றியை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு கட்சிகளையும் கூட்டணியில் இணைத்துக் கொள்கிறது.

அந்த வகையில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போன்றவையும் இதில் அடங்கும்.இதனால் அதிமுக மற்ற கட்சிகளை காட்டிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது.மேற்கொண்டு திருச்சியில் போட்டியானது கடுமையாக உள்ளது.ஏனென்றால் இந்திய கூட்டணி கட்சிகள் சார்பாக துரை வைகோவும், பாஜக கூட்டணி சார்பாகவும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் களம் கான உள்ளது.

அதுமட்டுமின்றி  அங்குள்ள கிராமங்களில் அதிகளவு கழிப்பறை கட்டிக் கொடுத்து பொதுவெளியில் மலம் கழிப்பதை தவிர்த்து இதற்கென்று பத்மஸ்ரீ விருது பெற்ற கிராமாலய தொண்டு நிறுவனரும் தனித்து களமிறங்கியுள்ளார்.இவர்கள் மத்தியில் அதிமுக சார்பாக கருப்பையா உள்ளதால் இவரை வெற்றிக்கான வைக்க வேண்டும் என்பதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மும்மரம் காட்டி வருகிறார்.

அவ்வபோது நிர்வாகிகளை அழைத்து அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் பேசியும் வருகிறார் அந்த வகையில் கடைசியாக நடைபெற்ற கூட்டத்தில் எந்த ஒரு தொகுதியில் ஆளும் கட்சியை காட்டிலும் அதிக ஓட்டுக்கள் வாங்குகிறார்களோ அவர்களுக்கு கட்டாயம் இன்னோவா கார் வழங்கப்படும் என்றும் திமுகவிற்கு ஒரு ஓட்டு கூட விழாமல் அதிமுகவிற்கே அனைத்து ஓட்டுகளையும் வாங்கி கொடுத்தால் வட்ட செயலாளர்களுக்கு கட்டாயம் ஐந்து பவுன் நான் தருகிறேன் என்று உறுதியளித்துள்ளார்.

இது போலவே கடந்த தேர்தலிலும் விஜயபாஸ்கர் கூறி நிர்வாகிகளுக்கு தங்க மோதிரம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் அதிமுக சார்பாக திருச்சி தொகுதியில் உள்ள நிர்வாகிகளுக்கு தங்க வேட்டை தான் என்று பலரும் கூறுகின்றனர்.