காங்கிரஸ் கட்சியின் 5 வாக்குறுதிகள்! ஒப்புதல் அளித்த அமைச்சரவை!!

0
251
#image_title
காங்கிரஸ் கட்சியின் 5 வாக்குறுதிகள்! ஒப்புதல் அளித்த அமைச்சரவை!
காங்கிரஸ் கட்சியின் வீட்டுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், குடும்பத் தலைவிக்கு 2000 ரூபாய் உள்பட 5 உத்திரவாதங்களுக்கு இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இன்று காலையில் பெங்களூருவில்  நடைபெற்ற முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சி தலைவர் சித்தராமையா முதலமைச்சராகவும், டிகே சிவக்குமார் துணை முதலமைச்சராகவும் மேலும் 8 மந்திரிகளும் பதவியேற்றுக் கொண்டனர். கவர்னர் இவர்கள் அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதையடுத்து பேசிய  காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தங்களுக்கு ஆதரவு அளித்து வெற்றா பெறவைத்த மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். பிறகு தேர்தல் வாக்குறுதிகளான  200 யூனிட் இலவச மின்சாரம், குடும்பத் தலைவிக்கு 2000 ரூபாய் பணம் உள்ளிட 5 உத்திரவாதங்கள் பற்றிய அறிவிப்பு மாலை நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் தெரிவிக்கப்படும் என்றார்.
இதையடுத்து இன்று மாலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த 5 வாக்குறிகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் பின்வருமாறு.
1. கிரக ஜோதி திட்டம் : இந்த கிரக ஜோதி திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக  வழங்கப்படும்.
2. கிரகஷ்மி திட்டம்: கிரகஷ்மி என்ற இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்படும்.
3. அன்ன பாக்யா திட்டம்: அன்ன பாக்யா என்ற திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு மாதந்தோறும் 10 கிலோ அரிசி வழங்கப்படும்.
4. யுவநிதி திட்டம்: இந்த யுவநிதி திட்டத்தின் கீழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 3000 ரூபாயும், டிப்ளமோ படித்த வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 1500 ரூபாயும் வழங்கப்படும்.
5.சக்தி திட்டம்: இந்த சக்தி திட்டத்தின் கீழ் அனைத்து பெண்களுக்கும் மாநிலத்தின் அரசு பேருந்துகளில் இலவச பயணம்.