புழக்கத்திலிருந்து நீக்கப்படும் 5 ரூபாய் நாணயங்கள்!!RBI அறிவிப்பு!!

0
448

இந்தியாவில் நாணயங்கள் அல்லது ரூபாய் நோட்டுகள் பயன்படுத்துவதை நிறுத்தவும், புதியவற்றை உருவாக்கவும் பின்பற்ற வேண்டிய சிறப்பு விதிகள் உள்ளன.

 

தற்பொழுது பயன்பாட்டில் உள்ள ஐந்து ரூபாய் நாணயங்களை நிறுத்த இந்தியன் ரிசர்வ் வங்கி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) புதிய நாணயங்களை வெளியிட அல்லது பழைய நாணயங்கள் அச்சிடப்படுவதை நிறுத்த மத்திய அரசிடம் அனுமதி கேட்க வேண்டும். அரசின் ஒப்புதலுக்கு பிறகு தான் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படும்.

 

மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு கருப்பு பணத்தை ஒழிக்க புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது. அதற்கு பதில் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டிற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.தற்போது, இந்தியாவில் ரூ.1 முதல் ரூ.20 வரையிலான நாணயங்கள் பயன்பாட்டில் உள்ளன. அதே சமயம் ரூ. 30, ரூ 50 மற்றும் 100 ரூபாய் மதிப்பிலான புதிய நாணயங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்தும் மத்திய அரசிடம் யோசனைகள் உள்ளன.

 

இந்நிலையில் 5 ரூபாய் நாணயம் ரத்து செய்யப்படுகிறதா என்ற தகவல் வெளியாகி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு நாணயங்கள் அச்சிடுவது தொடர்பான புதிய விதிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியிடம் இருந்து அதிகாரபூர்வமாக தகவல் எதுவும் இல்லை.