Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்கள் குலதெய்வம் உங்கள் வீட்டில் இருக்கிறதா? அல்லது இல்லையா? என்பதை அறிந்து கொள்ள உதவும் 5 அறிகுறிகள்..!!

ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவரவர் குலதெய்வங்கள் தான் அந்த குடும்பத்தை காப்பாற்றக் கூடிய ஆணிவேராக திகழும். அத்தகைய குலதெய்வம் ஒரு சில குடும்பங்களுக்கு, அவர்கள் இருக்கக்கூடிய பூர்வீகத்திலேயே இருக்கும். ஆனால் ஒரு சில குடும்பங்களுக்கு மிக தொலைவில் அந்த குலதெய்வம் அமைந்திருக்கும்.

அருகில் இருப்பவர்கள் அடிக்கடி அவர்களது குலதெய்வத்தை சென்று வணங்கி வருவார்கள். ஆனால் தொலைவில் இருப்பவர்கள் வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ கண்டிப்பாக சென்று வணங்கி வர வேண்டும்.

குலதெய்வத்தை மறவாமல் அவ்வபோது சென்று வணங்கி வந்தால் மட்டுமே அவரது அருள் நமது குடும்பத்தில் பரவி இருக்கும். அவ்வாறு குலதெய்வம் நமக்கு துணையாக இருக்கிறது அதாவது நமது வீட்டில் குடி கொண்டு இருக்கிறது என்பதை உணர்த்தக்கூடிய ஐந்து அறிகுறிகள் குறித்து தற்போது காண்போம்.

1. எலுமிச்சை பழம்:
குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்ட பின்னர் அங்கு கொடுக்கக்கூடிய எலுமிச்சை பழத்தை நமது வீட்டின் பூஜை அறையிலோ அல்லது பணம் வைக்கக்கூடிய பெட்டிகளிலோ நாம் வைப்போம்.

அவ்வாறு வைக்கக்கூடிய எலுமிச்சம் பழம் சில நாட்களுக்குப் பிறகு நன்கு காய்ந்து இருக்கும். அவ்வாறு காய்ந்து இருந்தால் அது நல்லது தான். அதாவது நமது குலதெய்வம் நமது வீட்டில் இருக்கிறது என்று அர்த்தம். அதற்கு மாறாக எலுமிச்சம்பழம் அழுகி இருந்தால் குலதெய்வம் நமது வீட்டில் இல்லை என்று அர்த்தம்.

2. பல்லிகள்:
நமது வீட்டில் பள்ளிகள் நிறைய இருக்கிறது என்றாலும் நமது குலதெய்வம் நமது வீட்டில் இருப்பதாக அர்த்தம் என்று கூறப்படுகிறது. பல்லிகள் சத்தம் போடுவதும் ஒரு விதமான குலதெய்வத்தின் வாக்கு என்றும் கூறப்படுகிறது.

நாம் வெளியில் செல்லும் பொழுது பல்லிகள் சத்தமிட்டால் நாம் செய்ய இருக்கக்கூடிய காரியம் நிச்சயம் வெற்றி அடையும்.இது போன்று பள்ளிகள், பூச்சிகள், பறவைகள் நமது வீட்டிற்குள் வந்தால் குலதெய்வம் நமது வீட்டில் இருப்பதாக அர்த்தம்.

3. தெய்வீக மனம்:
நமது வீட்டில் திடீரென விபூதி, சந்தனம், சாம்பிராணி, மல்லிகைப் பூ, சுருட்டு இது போன்ற வாசனைகள் வந்தாலும் நமது குலதெய்வம் நமது வீட்டில் இருப்பதாக அர்த்தம் என்று கூறப்படுகிறது.

4. மணி ஓசை:
நமது வீட்டின் பூஜையறையில் நாம் கடவுளை வணங்கிக் கொண்டிருக்கும் பொழுது, திடீரென நமது வீட்டின் அருகில் இருந்தோ அல்லது தூரத்தில் இருந்தோ மணி எழுப்பும் ஓசை கேட்டால் அதுவும் ஒரு நல்ல சகுனம் தான்.

அதேபோன்று நாம் நமது கண்களை மூடி கடவுளை வணங்கிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென கடவுளிடம் இருந்து பூவோ அல்லது எலுமிச்சம் கனியோ கீழே விழுந்தால் அதுவும் நமது வீட்டில் இறையருள் இருப்பதை உணர்த்துவதாக அர்த்தம்.
இது போன்ற சகுனங்கள் ஏற்பட்டால், நமது குடும்பத்தில் யாருக்கேனும் ஒருவருக்கு வரவிருந்த பெரிய கண்டம் விலகும் என்றும் கூறப்படுகிறது.

5. கண்ணீர்:
நாம் நமது குலதெய்வ கோவிலுக்கு செல்லும் பொழுது நமது தாய் தந்தை வீட்டுக்கு செல்வது போன்ற உணர்வு ஏற்பட்டாலோ அல்லது அங்கு சென்று கடவுளை வணங்கும் பொழுது கண்ணீர் வந்தாலோ நமது குலதெய்வத்தின் அருள் நமக்கு இருப்பதாக அர்த்தம்.

இது போன்ற ஐந்து அறிகுறிகளையும் நீங்கள் உணர்ந்தால் உங்கள் குலதெய்வம் உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறது என்று அர்த்தம். அவ்வாறு இல்லை எனில் நீங்கள் அவ்வப்போது உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று, சரியான வழிபாட்டு முறைகளை செய்து வந்தால் உங்கள் குடும்பத்திலும் உங்களது குலதெய்வம் வந்து குடியேறும்.

Exit mobile version