சேற்றுப்புண்ணை ஒரே இரவில் மறையச் செய்யும் 5 சூப்பர் டிப்ஸ்!! இன்றே பயன்படுத்துங்கள்!!

0
181
5 super tips to make pimples disappear overnight!! Apply today!!

சேற்றுப்புண்ணை ஒரே இரவில் மறையச் செய்யும் 5 சூப்பர் டிப்ஸ்!! இன்றே பயன்படுத்துங்கள்!!

மழை மற்றும் குளிர்காலங்களில் கால் பாத இடுக்குகளில் சேற்றுப்புண்கள் தோன்றி மிகுந்த வலி,எரிச்சல் மற்றும் அரிப்பை உண்டாக்கும்.சிலருக்கு சேற்றுபுண்கள் உள்ள இடத்தில் இரத்தம் வெளியேறி நடக்க முடியாத அளவிற்கு வலியை கொடுக்கும்.

ஈரப்பதமான இடத்தில் நீண்ட நேரம் நின்று வேலை செய்தல்,ஈரமான இடங்கள்,சேற்றுகளில் நடத்தல் போன்ற காரணங்களால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

சேற்றுபுண்ணை குணமாக்க உதவும் 5 டிப்ஸ் இதோ:

தீர்வு 01:

1)மஞ்சள் தூள்
2)வேப்பிலை

முதலில் ஒரு கைப்பிடி வேப்பிலையை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.பிறகு அதில் தண்ணீர் ஊற்றி அலசி சுத்தப்படுத்திக் கொள்ளவும்.

பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் இந்த வேப்பிலையை போட்டு ஒரு தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து அரைத்து பேஸ்ட்டாக எடுத்துக் கொள்ளவும்.

இந்த பேஸ்டை கால்களை கழுவி சுத்தம் செய்த பின்னர் சேற்றுப்புண்கள் மீது தடவவும்.இதை ஒரு இரவுவிட்டு மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவி சுத்தம் செய்து வந்தால் சேற்றுப்புண் விரைவில் ஆறிவிடும்.

தீர்வு:

1)மஞ்சள் தூள்
2)தேங்காய் எண்ணெய்

சேற்றுப்புண்ணை சீக்கிரம் குணமாக்க தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த மருந்தாக செயல்படுகிறது.சுத்தமான தேங்காய் எண்ணெயில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்டாக்கி சேற்றுப்புண்கள் மீது அப்ளை செய்து வந்தால் அவை விரைவில் ஆறிவிடும்.

தீர்வு 03:

1)மஞ்சள் தூள்
2)மருதாணி இலை

ஒரு கைப்பிடி மருதாணி இலையை தண்ணீர் விட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு அதில் சிறிது மஞ்சள் சேர்த்து கால் பாதங்களில் பூசி வந்தால் சேற்றுப்புண் விரைவில் ஆறிவிடும்.உடல் சூடு பிரச்சனையையும் சரி செய்கிறது.

தீர்வு 03:

1)மஞ்சள் தூள்
2)வேப்ப எண்ணெய்

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய வேப்ப எண்ணெயை வாங்கிக் கொள்ளவும்.அதில் இரண்டு தேக்கரண்டி அளவு வேப்ப எண்ணெய் எடுத்து சிறிது மஞ்சள் கலந்து பாதங்களில் அப்ளை செய்து வந்தால் சேற்றுப்புண் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

தீர்வு 04:

1)மஞ்சள் தூள்
2)கற்றாழை ஜெல்

ஒரு துண்டு கற்றாழை மடலில் இருக்கின்ற ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து எடுத்து கொள்ளவும்.இதை நீரில் போட்டு 2 முறைக்கு மேல் அலசி சுத்தப்படுத்திக் கொள்ளவும்.பின்னர் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளை அதில் போட்டு கலந்து சேற்றுப்புண்கள் மீது பூசினால் விரைவில் அவை ஆறிவிடும்.