விழுப்புரத்தில் பசிக் கொடுமையால் 5 வயது சிறுவன் உயிரிழப்பு! எங்கே செல்கிறது தமிழகம்

0
219
5-years-old-boy-died

விழுப்புரத்தில் பசிக் கொடுமையால் 5 வயது சிறுவன் உயிரிழப்பு! எங்கே செல்கிறது தமிழகம்

விழுப்புரம் வடக்கு தெருவை சேர்ந்த சிவக்குமார் சலவை தொழில் செய்து வருகிறார்.இவர் விழுப்புரம்-திண்டிவனம் சாலையில் தள்ளு வண்டி கடையை போட்டு அதில் இஸ்திரி போடும் தொழிலையும் செய்து வருகிறார்.இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி வந்து பார்க்கையில் அவரது வண்டியில் 5 வயதுடைய சிறுவன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனையடுத்து அவர் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.இந்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சிறுவனின் இறப்பு குறித்தும் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.சிறுவனை யாராவது அடித்து துன்புறுத்தி கொலை செய்துள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் அங்கன்வாடி சீருடையுடன் சிறுவன் இறந்துள்ளதால் அருகிலுள்ள அங்கன்வாடி மையங்களுக்கும் சிறுவன் புகைப்படத்தை அனுப்பி விசாரித்து வருகின்றனர்.இதனையடுத்து மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை முடிவில் சிறுவன் கொலை செய்யப்படவில்லை என்றும்,கடந்த இரண்டு நாட்களாக குடலில் உணவு,தண்ணீர் என எதுவும் இல்லை என்பதால் பசியால் உயிரிழந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இறந்த சிறுவனை அடையாளம் காண காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்காக தனிப்படை அமைத்து கர்நாடகா மற்றும் ஆந்திராவில் விசாரணைக்கு சென்றுள்ளனர்.இந்நிலையில் பசிக்கொடுமையால் 5 வயது சிறுவன் உயிரிழக்கும் சூழலில் தமிழகம் உள்ளதா என பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.