Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சுக்கிரன் உதயத்தால் அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் 5 ராசிக்காரர்கள்!

 

சுக்கிரன் உதயத்தால் அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் 5 ராசிக்காரர்கள்!

 

கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி கடக ராசியில் சுக்கிர பகவான் உதயமாகி இருக்கிறார். இதனால், வரும் வாரங்களில் அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் 5 ராசிக்காரர்களைப் பற்றி பார்ப்போம் –

 

 

மேஷம்

 

வரும் ஆகஸ்ட் 18ம் தேதி கடக ராசியில் சுக்கிர பகவான் உதயமாவதால், மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் தேடி வரப்போகிறது. உங்கள் வாழ்க்கையில் நீண்ட காலமாக இருந்து வந்த அனைத்து பிரச்சினைகளும் தீரும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் வருமானம் பெருகும். குடும்பத்தில் மனைவியோடு மகிழ்ச்சி பிறக்கும். நீங்கள் நினைத்த அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக அமையும்.

 

ரிஷபம்

 

வரும் ஆகஸ்ட் 18ம் தேதி கடக ராசியில் சுக்கிர பகவான் உதயமாவதால், ரிஷப ராசிக்காரர்களே உங்களின் பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதி பெறப்போகிறீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலை துறையில் பணியாற்றுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். நண்பர்களால் சில நன்மை கிடைக்கும்.

 

மிதுனம்

 

வரும் ஆகஸ்ட் 18ம் தேதி கடக ராசியில் சுக்கிர பகவான் உதயமாவதால், மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு உறவுகளால் அன்பு அதிகரிக்க உள்ளது. உங்கள் வாழ்க்கையில் கடன் பிரச்சினைகள் குறையும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைய உள்ளீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளும், லாபமும் பெருக உள்ளது.

 

கடகம்

 

வரும் ஆகஸ்ட் 18ம் தேதி கடக ராசியில் சுக்கிர பகவான் உதயமாவதால், கடக ராசிக்காரர்களே நீங்கள் எடுத்த காரியம் பலனை கொடுக்கும். நிதிநிலை சீராக இருக்கும். பண முதலீடு பெருகும். குடும்ப உறுப்பினர்களிடம் மரியாதை பெருகும். உறவுகளும் வலுப்பெறும். நண்பர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். கடன் தொல்லை விலகும். இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனைவியுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.

 

மீனம்

 

வரும் ஆகஸ்ட் 18ம் தேதி கடக ராசியில் சுக்கிர பகவான் உதயமாவதால், மீன ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கப்போகிறது. வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய உள்ளீர்கள். பொருளாதாரம் வலுப்பெறும். காதல் திருமணம் கைக்கூடும். பல வருடங்களாக குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும்.

 

Exit mobile version