அதிமுகவுடன் திமுக எம்எல்ஏக்கள் தொடர்பில் உள்ள விவகாரம்! திமுக தரப்பில் பதிலடி!

0
179

திருவாரூரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, எங்களுடன் 10 திமுக சட்டசபை உறுப்பினர்கள் தொடர்பிலிருக்கிறார்கள் என்று தெரிவித்து தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பினார். எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த அந்த 10 சட்டசபை உறுப்பினர்கள் யார்? என்ற கேள்வி தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, அதிமுகவை சார்ந்த 50 சட்டசபை உறுப்பினர்கள், 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 30 மாவட்டச் செயலாளர்கள், எங்களுடன் தொடர்பிலிருக்கிறார்கள்.

10 திமுகவின் சட்டசபை உறுப்பினர்களின் பெயர்களை எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டால் 50 பேரின் பெயர்களை நாங்கள் வெளியிட தயாராகவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் யாத்திரை என்பது பாஜகவிற்கு அதிர்ச்சி தரும் செய்தியாக இருக்கிறது. கடந்த தேர்தலில் 37 சதவீத ஓட்டுக்களை வாங்கி தான் பிரதமராக நரேந்திரமோடி அமர்ந்தார்.

சென்ற தேர்தலில் 63 சதவீத ஓட்டுகள் என்பது மோடிக்கு எதிராக வந்துள்ளது. இத்தகைய 63% வாக்குகளையும், ஒன்றாக திரட்டும் வேலையில் தான் முதலமைச்சர் ஸ்டாலின், ராகுல் காந்தி, உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார் ஆர் எஸ் பாரதி.