Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிறையில் கண்ணீர் வடிக்கும் 50 பிகில் கைதிகள்

சிறையில் கண்ணீர் வடிக்கும் 50 பிகில் கைதிகள்

விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தியேட்டரில் அதிகாலை சிறப்பு காட்சி திரையிடப்படவில்லை என்று ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர் என்பதும், இதனையடுத்து சம்பவம் நடந்த அன்று 32 விஜய் ரசிகர்களும் நேற்று 18 ரசிகர்களும் என மொத்தம் 50 ரசிகர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது சிறையில் இருக்கும் பிகில் கைதிகளை பார்த்து அவர்களுடைய பெற்றோர்கள் கண்ணீர் வடிப்பதும், பெற்றவர்களின் கஷ்டத்தை பார்த்து சிறைக்கைதிகள் கண்ணீர் வடிப்பதுமான நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்து வருகின்றது.

ஒரு திரைப்படத்தை திரைப்படமாக பார்க்காமல் அதில் நடித்த நடிகரை கடவுளுக்கு இணையாக பார்ப்பதன் பாதிப்பு தான் இந்த வன்முறை சம்பவம். தற்போது சிறையில் வாடும் இந்த 50 கைதிகளுக்க்கு ஆதரவாக எந்த ஒரு விஜய் ரசிகர் மன்றமோ, விஜய்யோ குரல் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

பிகில் படத்தின் ஆடியோ விழாவில் என் பேனரை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், ஆனால் என் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள் என்று வீராவேசமாக பேசிய விஜய் தற்போது தனது ரசிகர்கள் சிறையில் இருப்பது குறித்து வாய் திறக்காமல் மௌனமாகவே உள்ளார். மேலும் ரசிகர்களிடம் இது போன்ற வன்முறைச் செயலில் ஈடுபட வேண்டாம் என்று குறைந்தபட்ச அறிவுரையை கூட அவர் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Exit mobile version