நான்கு நாட்களில் 500 கோடி வசூல்!! பாக்ஸ் ஆபிஸை தெறிக்க விட்டு ஆட்டம் காண வைக்கும் ஜவான்!!

0
145
#image_title

நான்கு நாட்களில் 500 கோடி வசூல்!! பாக்ஸ் ஆபிஸை தெறிக்க விட்டு ஆட்டம் காண வைக்கும் ஜவான்!!

தமிழில் தெறி,மெர்சல் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் அட்லீ அவர்கள் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.இதன் மூலம் ஹிந்தி திரையுலகில் அட்லீ இயக்குநராக அறிமுமாகி இருக்கிறார். இந்த ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருக்கிறார்.இவர்களை தவிர்த்து யோகிபாபு,விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.கடந்த செப்டம்பர் 7 அன்று இந்தி,தமிழ்,தெலுங்கு மொழிகளில் உலகம் முழுவதும் 4000 திரையரங்குகளில் இப்படம் வெளியானது.

இப்படம் வெளியான நாளிலிருந்தே வசூலை வாரி குவித்து வருகிறது.முதல் நாள் வசூல் சுமார் 150 கோடி என்று சொல்லப்பட்ட நிலையில் தினமும் 100 கோடிக்கும் அதிகமாக தொடர்ந்து வசூல் செய்து வருகிறது.ஞாயிற்று கிழமையான நேற்று மட்டும் 120 கோடி வசூலித்துள்ளது.

தொடர்ந்து வசூலில் புதிய சாதனை படைத்து வரும் ஜவான் வெளியான வெறும் நான்கு நாட்களில் 500 கோடியை அசால்ட்டாக தட்டி தூக்கி விட்டது.இதன் மூலம் 500 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்த ஜவான் விரைவில் 1000 கோடியை எட்டும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.ஒருவேளை ஜவான் படம் 1000 கோடி வசூலை தொட்டு விட்டது என்றால் கோலிவுட்டில் ஆயிரம் கோடி கலெக்‌ஷன் கொடுத்த முதல் இயக்குநர் என்ற பெருமைக்கு அட்லீ சொந்தக்காரர் ஆவார்.என்னதான் காப்பி படம் என்று நெட்டிசன்கள் விமர்சித்து வந்தாலும் படத்தின் வசூலில் மட்டும் எந்த ஒரு சரிவும் இதுவரை ஏற்பட வில்லை என்பது தான் நிதர்சனம்.