வங்கி கணக்கில் 500 அதிகரிப்பு! இன்று முதல் எடுத்துக் கொள்ளலாம்!
பயனாளிகளின் வங்கிக்கணக்கில் 500 கூடுதல் உதவித் தொகையாக வரவு வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தேனி. ஜெயக்குமார் கூறியுள்ளார். புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் புதுவை அலுவலக செய்தி குறிப்பில் இவ்வாறு கூறியிருந்தார். முதலமைச்சராக பதவி ஏற்கும் போது மாதம்தோறும் அரசு உதவித்தொகை பெற்று வரும் முதியோர், விதவைகள், முதிர்கண்ணிகள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக மாதந்தோறும் 500 உயர்த்தி வழங்கப்படும்.
மேலும் புதிதாக 10,000 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையும் வழங்கப்படும் எனவும் அறிவித்து இருந்தார். புதுவை முதல்வர் ரங்கசாமியின் இந்த அறிவிப்பை ஏற்று 500 கூடுதல் உதவி தொகையானது ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 747 பயனாளிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது. இந்த தொகையை இன்று முதல் வங்கியை அணுகி பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறினார்.
இதனை தொடர்ந்து 18 முதல் 55 வரை உள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், திருநங்கைகள் மற்றும் 55 முதல் 59 வரையுள்ள முதியோர்களுக்கு 1500 லிருந்து 2000 ஆகவும், 60 வயது முதல் 79 வயது வரையுள்ள முதியோர்களுக்கு இரண்டாயிரத்தில் இருந்து 2500 ஆகவும், 80 வயதுக்கு மேல் உள்ள முதியோர்களுக்கு 3 ஆயிரத்திலிருந்து 3 ஆயிரத்து 500 ஆகவும் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது. மேலும் 10,000 புதிய கூடுதல் பயனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட உதவி தொகையானது வருகிற வெள்ளிக்கிழமை முதல் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் தகவல் தெரிவித்தார்.
தேர்தல் வாக்குறுதிகளை கொடுப்பது பெரிதல்ல. அதை நிறைவேற்றவும் வேண்டும் என்று அவர் நிரூபித்து உள்ளார்.