Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனி 500 ரூபாய் நோட்டு செல்லாத? பீதில் பொதுமக்கள் அவதி!

இனி 500 ரூபாய் நோட்டு செல்லாத? பீதில் பொதுமக்கள் அவதி!

கள்ள நோட்டுகள் குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களால் சமூக இணையதளங்கள் மற்றும் ட்விட்டர் வலைதளங்கள் தினமும் மிகவும் அதிக அளவில் பகிரப்படுகின்றன. கணக்குகளில் போலி நோட்டுகள் மற்றும் நாணயங்களை அடையாளம் காணும் முறையை பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கடந்த சில நாட்களாக ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்தியாவில் கள்ள நோட்டுகளை பதுக்கி வைக்கப்பதை தடுக்க கடந்த 2016ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி புதிய திட்டத்தை அமல்படுத்தியிருந்தார் . என்னவென்றால் பழைய 500/- ரூபாய் மற்றும் பழைய 1000/- ரூபாய் ரத்து செய்யப்பட்டு. மாறாக, புதிய 500 ரூபாய், புதிய 200 ரூபாய், மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும் சமூக வலைதளங்களில், இரண்டு வகையான 500 ரூபாய் நோட்டுகள் காணப்படுகின்றன. இதில், காந்திஜியின் புகைப்படத்திற்கு அருகில் பச்சை நிற கோடு உள்ளது. மற்றொரு வகையான புகைப்படத்தில்
காந்திஜியின் புகைப்படத்திலிருந்து சிறிது தொலைவில் இந்த பச்சைக்கோடு உள்ளது. இந்த கோடு இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையெழுத்துக்கு அருகில் உள்ளதாகவும் இருக்கிறது. இதையடுத்து இந்த புகைப்படத்தின் கீழ் காந்திஜியின் அருகில் பச்சைக் கோடு போடப்பட்டிருக்கும் 500 ரூபாய் நோட்டு செல்லாது. அதனால் மற்றொரு 500 ரூபாய் நோட்டை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து தற்போது 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் நிலையில் 500 ரூபாய் அதிகமாக பயன்படுத்தி உள்ளன. இந்த நோட்டுகள் செல்லாது என்ற தகவல் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில் ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பத்துடன் பச்சை நிற கோடு இருப்பதாகவும் இதனை போலியான ரூபாய் நோட்டு என்றும் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக PIB Fact Check இந்திய ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, இந்த 2 வகையான 500 ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகும்.அதனால் பொதுமக்கள் யாரும் இந்த தகவலை நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version