கொரோனா வைரஸ் பாதிப்பினால் நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற நிறுவனங்கள் அனைத்தும் முடங்கியிருந்தன. இந்நிலையில் தற்போதுள்ள ஊரடங்களில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்த வண்ணமே செல்கிறது. நேற்று வரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 23495 ஆக அதிகரித்துள்ளது.
இதில் நேற்று மட்டுமே 1162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை இந்த கொரோனா பாதிப்பினால் தமிழகத்தில் 184 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் நேற்று ஒரேநாளில் மட்டுமே 11 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் மட்டுமே 15,000 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவாக சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டுமே 964 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 15,770 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 413 பேர் குணமடைந்து வீடு திருப்பி உள்ளனர். இதுவரையில் மொத்தமாக 13,170 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இவ்வாறு தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது ஒரு பக்கமும், அன்றாட வேலைகளுக்கு செல்ல முடியாமல் ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கியுள்ளது என பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில் தற்போது நாடக கலைஞர்கள் மற்றும் நாடக கலைகுழுக்களுக்கு இசை கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்க நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன் மூலமாக தனிப்பட்ட கலைஞர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ 5,000 வீதம் என 100 கலைஞர்களுக்கும், மேலும் கலைகுழுக்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ10, 000 வீதம் என 100 கலைகுழுக்களுக்கும் வழங்கப்படும் என தமிழக அரசு அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.