Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

10 வது படித்திருந்தால் மாதம் ரூ .5000!! மத்திய அரசின் புதிய இன்டர்ன்ஷிப் திட்டம்!!

5000 per month if you have studied 10th!! Central Govt New Internship Scheme!!

5000 per month if you have studied 10th!! Central Govt New Internship Scheme!!

இந்தியாவில் வேலையில்லாமல் போராடும் இளைஞர்களுக்கு பல முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெற்று தர பிரதமர் மோடி அவர்கள் இன்டர்ன்ஷிப் திட்டத்தின் மூலம் மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி உள்ளார்.

டி.சி.எஸ்., மஹிந்திரா, ரிலையன்ஸ், மாருதி சுசூகி, எச்.டி.எப்.சி., வங்கி உட்பட 500க்கும் மேற்பட்ட பெருநிறுவனங்கள் இத்திட்டத்தில் இணைந்து இளைஞர்களுக்கு பயிற்சி வாய்ப்புகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் மத்திய அரசு இதற்காக 800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற சேரும் இளைஞர்களுக்கு உதவித் தொகையாக மாதம் 5000 ரூபாயும், ஒருமுறை மானியமாக 6000 ரூபாயும் வழங்கப்படும் என்றும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி திட்டத்தில் முதல் கட்டமாக அக்டோபர் 3 முதல் 20 வரையில் விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, நிறுவனங்களில் பயிற்சி பெற அனுப்பப்பட்டுள்ளது. இதில் 280 நிறுவனங்களில் 1.28 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது, இரண்டாவது கட்டமாக அக்டோபர் 12 முதல் நவம்பர் 10 வரை 10th, பிளஸ் 2, டிப்ளமோ, ஐடிஐ, இளநிலை பட்டப்படிப்பு படித்த மாணவர்கள் இதில் விண்ணப்பிக்கலாம். மேலும் இதில் தேர்ந்தெடுக்கப்படும் 1.25 லட்சம் மாணவர்கள் இறுதிப்பட்டியலில் இடம்பெறுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர்கள் டிசம்பர் 2 தேதி வெளியிடப்படும் என்றும், அதற்குப் பின் பயிற்சி காலம் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Exit mobile version