குப்பை கொட்டினால் 5000 ரூபாய் அபராதம்! அதிர்ச்சியில் பொதுமக்கள்! 

0
130
5000 rupees fine for littering! Public in shock!

 

சென்னையில் பொது இடங்களில் குப்பையை கொட்டுபவர்களுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று. சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் இந்த அறிவிப்பு பொது மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

நாம் அனைவரும் நம்முடைய வீடுகளை சுத்தமாக வைக்க வீடுகளில் உள்ள குப்பைகளை கூட்டி வாரி எடுத்து தெருக்களில் கொட்டுகின்றோம். ஆனால் நம்முடைய வீட்டை மட்டும் சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்பும் அனைவரும் தெருக்களை சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்புவது கிடையாது.

தெருக்கள், வீதிகள் போன்ற பொது இடங்களில் குப்பைகளை கண்டிப்பாக கொட்டக்கூடாது என்றும் குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் மட்டும் தான் கொட்ட வேண்டும் என்றும் கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் அனைவரும் கண்டிப்பாக கடையில் குப்பைத் தொட்டி வைத்திருக்க வேண்டும் என்பது தமிழகம் முழுவதும் விதிமுறையாக இருந்து வருகின்றது. இருப்பினும் தமிழகத்தில் பல பகுதிகளில் மக்கள் விதிமுறைகளை மதிக்காமல் கண்ட இடத்தில் குப்பைகளை கொட்டுகின்றனர்.

இதனால் பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் பல பகுதிகளில் மக்கள் பொது இடங்களில் குப்பையை கொட்டுகின்றனர். சென்னை மாநகராட்சியும் இது தொடர்பாக பல முறை அறிவித்தும் மக்கள் கண்டுகொள்ளாமல் குப்பைகளை மீண்டும் மீண்டும் பொது இடங்களில் கொட்டி வரும் நிலையில் சென்னை மாநகராட்சி தற்பொழுது மக்களுக்கு பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் பொது இடங்களில் மரக்கழிவுகள் மற்றும் அது சார்ந்த குப்பையை கொட்டுபவர்களுக்கு 2000 ரூபாய் அபராதமும் கடைகளில் வியாபாரிகள் குப்பை தொட்டி வைக்காமல் இருந்தால் அவர்களுக்கு 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல பொது இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்திவிட்டு அதன் மூலம் மிஞ்சும் குப்பைகளை அகற்றும் அப்படியே விட்டுச் சென்றால் அவர்களுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் பொது இடங்களில் குப்பைகளை கேட்டும் மக்களுக்கு 1000 ரூபாய் அபராதமாக விதிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.