Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 5000 ரூபாய் வழங்கப்படும்! முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் பேட்டி!!

#image_title

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 5000 ரூபாய் வழங்கப்படும்! முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் பேட்டி!!

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 5000 ரூபாய் வழங்கப்படும் என்று சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.

மதுரையில் நடந்த விழாவில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது பாஜக கட்சியை பற்றியும் திமுக செயல்படுத்தியுள்ள மகளிர் உரிமைத் தொகை பற்றியும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் போசினார்.

மதுரையில் நடந்த விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ “போனால் போகுது என்று அவங்கள(பாஜக) எல்லாம் தோளில் தூக்கி வச்சு கொண்டாடினோம். ஆனால் அவங்க இப்போது நம்ம காதையே கடிக்கிறாங்க” என்று பாஜக கட்சியை கடுமையாக விமர்சித்து பேசினார்.

தொடர்ந்து அந்த விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் “அவங்கனாலதான்(பாஜக) ஆட்சி நம்ம கைய விட்டு போச்சு. ஆட்சி செய்யக்கூடிய பொறுப்பும் கைய விட்டு போச்சு. வெறும் 2 லட்சம் ஓட்டுகள் கூடுதலா வாங்கியிருந்தா அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவரு தமிழ்நாட்டோட முதலமைச்சரா இப்போது இருந்துருப்பாரு.

ஆளுங்கட்சி இப்போ தருகின்ற மாசம் 1000 ரூபாய் எத்தனை பேருக்கு கிடைப்பது இல்லை என்பது தெரியவில்லை. ஆனால் அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 2000 ரூபாய் அனைத்து பெண்களுக்கும் கொடுத்திருப்பார். ஏன் மாதம் 5000 ரூபாய் கூட கொடுத்திருப்பார்” என்று செல்லூர் ராஜூ அவர்கள் அந்த நிகழ்ச்சியில் பேசினார்.

Exit mobile version