இவர்களை பணியில் சேர்த்தால் 50 ஆயிரம் அபராதம் மூன்று ஆண்டு சிறை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 180 சதவீதமாக அதிகரித்துள்ளது.உலகின் மிகப்பெரிய கொடுமைகளில் ஒன்றாக இருப்பது குழந்தை தொழிலாளர் தான்.குடும்பங்களில் உள்ள வறுமையின் தான் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இவ்வாறு குழந்தை தொழிலார் உருவாகுவதை தவிர்க்க தமிழக அரசு எண்ணற்ற முயற்சிகளை செய்து வருகின்றது.
இந்நிலையில் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தமிழகத்தில் கொத்தடிமை தொழிலாளர்களை பணியில் அமர்த்த கூடாது என அறிவித்துள்ளது. 18 வயது நிறைவடையாத குழந்தைகள் மற்றும் வளரும் பருவத்தினரை கொத்தடிமை பணிகளில் ஈடுபடுத்தினால் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அபராதம் அல்லது ஆறு மாத காலம் குறையாமல் மற்றும் இரண்டு வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.
தமிழகத்தில் இனிவரும் காலங்களில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கண்காணிப்பு குழு மற்றும் மாவட்ட தடுப்பு படையினரால் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளபடும்.தமிழகத்தை கொத்தடிமை தொழிலாளர்கள் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக உருவாக இவ்வாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளபடுகின்றது என அரசு தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.