Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெண் குழந்தைகளின் வங்கிக் கணக்கில் ரூ 50000 போடப்படும்! அரசு வெளியிட்ட சூப்பர் நியூஸ்!

50000 will be deposited in the bank account of girls! Super news published by the government!

50000 will be deposited in the bank account of girls! Super news published by the government!

பெண் குழந்தைகளின் வங்கிக் கணக்கில் ரூ 50000 போடப்படும்! அரசு வெளியிட்ட சூப்பர் நியூஸ்!

கடந்த சட்டசபை தேர்தலின் பொழுது திமுக கட்சியானது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்கும் திட்டத்தை வாக்குறுதியாக வழங்கியது. ஆனால் தற்போது வரை அது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை அதனால் இந்த திட்டம் நிறைவேற்றப்படுமா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இந்த திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் அவ்வப்போது கூறி வந்தார்.

இந்நிலையில் சென்னை 2023-24 ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை இம்மாதம் இருபதாம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என சட்டசபை சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யும் மூன்றாவது நிதிநிலை அறிக்கை இதுதான். மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் உள்பட  பல முக்கிய திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் வெளியாக உள்ளது.

மேலும் தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டுத்தொடர் மார்ச் 20ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகின்றது. இந்த கூட்டுத்தொடர்  தொடங்கியதும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது.

இந்த பட்ஜெட் கூட்டு தொடரின் போது முதல்வர் ரங்கசாமி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிலிண்டர்க்கு மாதம் 300 மானியம் வழங்கப்படும் என அறிவித்தார். அதனை தொடர்ந்து பெண் குழந்தைகள் பிறந்தால் வங்கியில் 18 வருடங்களுக்கு 50,000 ரூபாய்  நிரந்தர வைப்பு நிதி செலுத்தப்படும் எனவும் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version