Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

52 பேர் உடல் கருகி உயிரிழப்பு! கொரோனா  நோயாளிகளுக்கு ஏற்பட்ட அவலம்!

52 people burnt to death! Disgrace to corona patients!

52 people burnt to death! Disgrace to corona patients!

52 பேர் உடல் கருகி உயிரிழப்பு! கொரோனா  நோயாளிகளுக்கு ஏற்பட்ட அவலம்!

கொரோனா தொற்றானது சீன நாட்டில் ஆரம்பித்து அனைத்து நாடுகளுக்கும் பரவியது.இன்றளவும் சில நாடுகள் அவற்றிலிருந்து மீள்வதற்கு பெருமளவு சிரமப்படுகின்றனர். நமது இந்தியாவில் முதல் அலையில் அதிக அளவு பாதிப்புகள் ஏற்படாவிட்டாலும் இரண்டாம் அலையில் அதிக அளவு உயிர் சேதங்களை சந்திக்க நேரிட்டது.தற்போது மூன்றாவது அலை உருவாகிறது என மருத்துவம் மற்றும் சுகாதார துறை அமைச்சகம் கூறிவருகிறது.ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா  தொற்று  நோயாளிகளுக்கு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு சிகிச்சை கொடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் ஈராக்கின் தெற்கு நகரமான ஆசியாவில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு என்று மருத்துவமனை ஒன்று உள்ளது.இந்த மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று  உடையவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.இந்த மருத்துவமனையில் உள்ள பிராணவாயு சேமிப்பு இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த தீயானது மளமளவென வேகமாக எரிய தொடங்கியதால் அங்குள்ள ஆக்சிஜன் சிலிண்டர்களும் சேர்ந்து வெடித்து சிதறியது.அதனையடுத்து மருத்துவமனை முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

சுற்றியுள்ள பொதுமக்கள் உதவியுடன் அங்கு சிகிச்சை பெற்று வந்த 100க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று  நோயாளிகளை காப்பாற்ற முடிந்தது.தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்த கொரோனா தொற்று நோயாளிகளுக்கு ஏற்பட்ட புகை மூட்டத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டும் மற்றும் அந்த தீயிலிருந்து அவர்களால் வெளியே வர முடியாத காரணத்தினாலும் 52 பேர் பரிதாபமாக உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பல மணி நேரம் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. போலீசார் இதனை வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மருத்துவமனையில் போதுமான அளவு தீ தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

Exit mobile version