Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரே பள்ளியில் 52 மாணவர்களுக்கு நோய்த்தொற்று உறுதியா? மாபெரும் அதிர்ச்சிகள் தமிழ்நாடு!

நோய் தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மாணவ, மாணவியர்கள் அனைவரும் வீட்டிலிருந்தப்படியே இணையதளம் மூலமாக கல்வி கற்று வந்தார்கள்.சுமார் இரண்டாண்டு காலமாக இதே நிலை நீடித்து வருவதால் மாணவர்களின் கற்றல் திறன் குறையத் தொடங்கும் என்ற காரணத்தினால், நோய்த்தொற்று தற்சமயம் குறைய தொடங்கியது. இதனை அடுத்து தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கடந்த ஒன்றாம் தேதி 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் இருக்கின்ற மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்படலாம் என்று தெரிவித்தார். அதோடு கல்லூரிகளும் செயல்படலாம் என அறிவித்தார்.

அதனடிப்படையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கடந்த ஒன்றாம் தேதி முதல் தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அதோடு பள்ளிகளுக்கு வரும் விருப்பம் இல்லாத மாணவர்களை கட்டாயப்படுத்தி பள்ளிக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது எனவும், தமிழக அரசு வலியுறுத்தி இருக்கிறது.இதற்கிடையில் தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்கள் பலருக்கு நோய்தொற்று அதிகரிக்க ஆரம்பித்தது நேற்றைய தின நிலவரத்தின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 80க்கும் அதிகமான பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், தென்காசி மாவட்டம் மாறந்தையில் இருக்கின்ற அரசு மேல்நிலைப்பள்ளியில் 52 மாணவர்களுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.நேற்று முன்தினம் அந்த பள்ளியில் படித்த 22 மாணவர்களுக்கு திடீரென்று காய்ச்சல் உண்டான சூழலில், நேற்று மேலும் 30 மாணவர்களுக்கு காய்ச்சல் உண்டாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து அந்தப் பள்ளி மாணவ ,மாணவிகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருக்கிறதா? என்று பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

இந்த பரிசோதனை முடிவுகள் வெளியான பின்னர் தான் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத் துறைசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரே பள்ளியை சேர்ந்த 52 மாணவ மாணவிகளுக்கு திடீரென்று காய்ச்சல் உண்டாகி இருப்பது மிகப் பெரிய அதிர்ச்சியையும் பரபரப்பையும் உண்டாக்கி உள்ளது.

Exit mobile version