Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

52 வயதில் குழந்தையை பெற்றெடுத்த பிரபல நடிகை!!வைரல் புகைப்படம்!!

90களில் பிரபலமாக வலம் வந்த நடிகையான இவர் ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக், பிரபு என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த பிரபல நடிகை ரேவதி. இவரக்கு தற்பொழுது வரையிலும் ஏராளமான ரசிகர் வட்டாரங்கள் உள்ளனர். இவர் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவரது பூர்விகம் கேரளா ஆகும். இவர் ஆண் பாவம் என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

நடிகை ரேவதி நடிகர் சுரேஷ் மேனனை காதலித்து 1988ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2002இல் பிரிந்துவிட்டனர். கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த ரேவதி தற்போது தனது 52 வயதில் குழந்தையை பெற்றெடுத்து இருப்பதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி வைரல் ஆனதை தொடர்ந்து இதற்கு அவர் விளக்கம் அளித்தார்.

டெஸ்ட் ட்யூப் பேபி முறையில் தான் ஒரு பெண் குழந்தையை பெற்றுள்ளதாக கூறினார். தற்போது ரேவதி தன் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Exit mobile version