சமூக வலைத்தளங்களில் நம்பர் ஒன் இடத்தில் உள்ள பேஸ்புக்கில் அக்கவுண்ட் இல்லாதவர்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு உலகம் முழுவதும் பரவியிருக்கும் ஃபேஸ்புக்கில் கடந்த சில ஆண்டுகளாக மிக அதிகளவில் போலி கணக்குகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.
பிரபலங்கள் பெயர்களில் பேஸ்புக்கில் போலிக்கணக்குகள் உருவாக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்த போலி கணக்குகளால் ஒருசில நன்மைகள் இருந்தாலும் இதன் மூலம் வரும் தீமைகள் ஏராளம். குறிப்பாக தீவிரவாதிகள் உள்பட சட்டவிரோதமாக செயல்படுபவர்கள் ஃபேஸ்புக்கில் போலிக்கணக்குகள் ஆரம்பித்து அதன் மூலம் ராணுவ ரகசியங்கள் கடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில், பேஸ்புக்கில் இந்த ஆண்டு 540 கோடி போலிக்கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு தடை செய்துள்ளதாகவும் இந்த தடையின் எண்ணிக்கை அதிகரிக்கும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் போலியான மற்றும் தவறான கணக்குகளை உருவாக்குவதற்கான முயற்சிகளைக் கண்டறிந்து அதனை தடுக்கவும் ஃபேஸ்புக் தொழில்நுட்ப அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
கல்வி, வேலை வாய்ப்பு, திருமணம், காதல், செய்திகள், உள்பட பல நல்ல விஷயங்கள் உள்ள பேஸ்புக்கில் போலி கணக்குகள் அதிகமாகியுள்ளதால் வைரஸ் பரப்புதல் உள்ளிட்ட தீயவைகளும் உள்ளது. இதற்கு விரைவில் ஃபேஸ்புக் நிர்வாகம் தீர்வு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது