இந்திய ரயில்வேவை ஏமாற்றி 56 கோடி அபேஸ்! டிக்கெட் முன்பதிவில் நடந்த குளறுபடி!!
கடைசி நேரத்தில் ரயில் பயணத்திற்கு பயணச்சீட்டு பெறுவதை தடுக்கும் வகையில் தட்கல் முறை கொண்டுவரப்பட்டது. இந்த தட்கல் முறையில் நாளை பயணம் செய்யப் போகிறவர்கள் அதற்கு முந்தைய நாளில் புக் செய்து கொள்ளலாம். அவ்வாறு புக் செய்யும் முறையில் பல மோசடிகள் நடப்பதாக ரயில்வே துறைக்கு பலமுறை புகார்கள் வந்துள்ளது. அதன் அடிப்படையில் திருச்சி ஆர்பிஎப் டிவிஷன் சைபர் கிரைம் காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை செய்து வந்தனர். இவர்கள் விசாரணை ஆரம்பித்ததில் டிக்கெட் முன்பதிவு செய்யும் தட்கல் சாப்ட்வேர் ஆல் டாட் இன் போன்றவை இணையதளங்களில் விற்பனை செய்யப்படுவதாக கண்டுபிடித்தனர்.
இதுபோல பல இணையதளங்களை வாங்க அதற்கான டொமைனை கோடாடி என்ற இணையத்தில் அந்த மோசடி கும்பல் வாங்கியுள்ளனர். அவ்வாறு வாங்கும் பொழுது இவர்களின் முகவரி , அலைபேசி எண் என முழு விவரங்களையும் கொடுத்துள்ளனர். கொடுத்த விவரங்களை வைத்து போலீசார் அன் நபரை கைது செய்தனர். இவர் பீகார் தனபூர் பகுதி சேர்ந்த சைலேஷ் யாதவ் என்பது தெரியவந்தது. மேற்கொண்டு அவரிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.
இவர் பல வெளிநாட்டு சாப்ட்வேர்களை சர்வதேச எண்கள் மூலம் வாங்கி நமது சட்டத்திற்கும் எதிராக டிக்கெட் புக் செய்யும் ஏஜெண்டுகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இவ்வாறு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகளை புக் செய்யும் ஏஜெண்டுகளுக்கு விற்பனை செய்து வந்தது அம்பலம் ஆகியுள்ளது. இந்த ஆப்களை ஒவ்வொரு ஏஜென்ட்-க்கும் 5 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் வரை விற்று வந்துள்ளார். இந்த சட்ட விரோதமான ஆப்பின் மூலம் ஒரு நாளில் 7000க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் டிக்கெட் புக் செய்துள்ளனர். இதனால் அரசுக்கு ரூ 56 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
மேலும் விசாரணையில் இவர்களுக்கு பின்னால் ஒரு பெரிய நெட்வொர்க் இருப்பதையே கண்டுபிடித்தனர். இவ்வாறு இணையதளங்களை ஏஜெண்டுகளுக்கு விற்று மாதம் ரூம் 3 லட்சம் வரை இவர் வருமானம் ஈட்டி உள்ளார். அதுமட்டுமின்றி அவரிடம் சட்டத்திற்கு புறம்பான சாஃப்ட்வேர்களை வாங்குவோர்களுக்கு அதனை எப்படி இன்ஸ்டால் செய்ய வேண்டும்? தக்கல் டிக்கெட்டுகளை எப்படி புக் செய்ய வேண்டும்? என்பதை யூட்யூபில் டி எஸ் எஎஸ்ஏ குரூப் என்ற பெயரில் ஆரம்பித்து பயிற்சியும் அளித்து வந்துள்ளார்.
ஒரு வருடம் கூட முடியாமல் தற்போது வரை மூவாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சட்டத்திற்கு எதிரான ஆப்களை விற்று வந்துள்ளார். மேலும் இந்த சட்ட விரோதமான ஆப்கள் ஐ ஆர் டி சி வெப்சைட்டில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை மீறி டிக்கெட்டுகளை பதிவு செய்யும் முறை, அதனை ரத்து செய்யும் முறை ஆகவற்றை செய்யலாம் என்பதையும் இந்த விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர் .அந்த ஏஜென்ட் களையும் போலீசார் தேடி வருகின்றனர். இவ்வாறு IRTC இணையத்தளத்தில் சட்ட விரோதமான ஆப்கள் மூலம் உள் நுழைந்து அதில் உள்ளவற்றை நமது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பது வியப்பில் ஆழ்த்துகிறது.