வந்தாச்சு பிஎஸ்என்எல் இல் 5ஜி சேவை! அடுத்த ஆண்டு முதல் தொடங்கும்!

0
196

வந்தாச்சு பிஎஸ்என்எல் இல் 5ஜி சேவை! அடுத்த ஆண்டு முதல் தொடங்கும்!

இந்தியாவில் உள்ள பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அடுத்த ஆண்டு முதல் 5ஜி சேவையை வழங்க உள்ளது.

வோடபோன், ஏர்டெல், ஜியோ, உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முக்கிய நகரங்களில் தங்களின் 5ஜி சேவையை ஏற்கனவே தொடங்கி விட்டன. ஆனால் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இன்னும் பின் தங்கியுள்ளது.

ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் 5ஜி சேவை ஒடிசாவில் முதலில் துவங்கப்பட்டுள்ளது. இதனை தொலைதொடர்பு துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ், மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் பங்கேற்று 5ஜி சேவையை தொடங்கி வைத்தனர். தற்போது புவனேஸ்வர் கட்டாக் நகரங்களில் 5ஜி சேவை கிடைக்கும். அடுத்த இரண்டு வருடங்களில் மாநிலம் முழுவதும் 5ஜசேவை கிடைக்கும்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அஸ்வினிடம் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் எப்போது 5ஜி சேவையை தொடங்கும் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அடுத்த ஆண்டு 2024 இல் பிஎஸ்என்எல் 5ஜி சேவை தொடங்கும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

முன்பு தொடர்பு நிறுவனங்களில் மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட நிறுவனமாக பிஎஸ்என்எல் திகழ்ந்து வந்தது. மத்திய நவரத்தின நிறுவனங்களில் ஒன்றான இதன் சேவை தொலைதூர கிராமங்கள், மலை கிராமங்களில் கூட கிடைத்து வந்தது.

ஆனால் தற்போது தனியார் நிறுவனங்களின் வருகை,  முடிவுகள் எடுப்பதில் தாமதம், தொழில்நுட்பத்திற்கு ஏற்ப வேகமாக மாறாதது, போட்டிகளை எதிர் கொள்ளாதது, போன்ற காரணங்களால் மிகவும் பின்தங்கியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களை படிப்படியாக இழந்த பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே திணறி வருகிறது.

மேலும் தனியார் நிறுவனங்கள் வளர்ச்சி பெற சில அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களால் வேண்டுமென்றே பிஎஸ்என்எல் பின் தங்க வைக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டும் நிலவி வருகிறது.