சித்தன் பட்டிகுட்டை கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில், கடந்த 20ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட சூழ்நிலையில், பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்று 5ம் வகுப்பு சிறுமி நான் இனி பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று பெற்றோரிடம் அழுதவாறு கூறியிருக்கிறார்.
அவரிடம் விசாரித்தபோது செந்தாரப்பட்டியை சார்ந்த அகஸ்டின் தங்கையா என்ற பள்ளி ஆசிரியர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக தெரிவித்திருக்கிறார்.
அத்துடன் தன்னோடு படிக்கும் சக மாணவர்களை கால்களை அமுக்க சொல்லி அவர்களிடமும் ஆசிரியர் அத்துமீறி நடந்து கொள்வதோடு, நேற்றையதினம் தன்னை பார்க்க பள்ளிக்கு வந்து உறவுக்கார 13 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் இதுதொடர்பாக பெற்றோரிடம் சொல்லக்கூடாது என்று மிரட்டி வருவதாகவும் அந்த மாணவி கூறியதாகச் சொல்லப்படுகிறது.
இதன்காரணமாக, அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஊர் மக்களுடன் சென்று பள்ளிக்கு வந்த ஆசிரியர் அகஸ்டின் தங்கையாவியிடம் விசாரித்து பார்த்தனர். இதற்கு அவர் மழுப்பலாக தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ஊர்மக்கள் ஆசிரியரை சரமாரியாக தாக்கியதாக சொல்லப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த ஆசிரியர் அகஸ்டின் தங்கையா கூடமலையிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுக்கொண்டு வீடு திரும்பியிருக்கிறார்.இதனால் மனமுடைந்த பெற்றோர் கெங்கவல்லி காவல் நிலையத்திற்கு வழங்கினர் என சொல்லப்படுகிறது.
இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள் வழங்கிய புகாரினடிப்படையில் கெங்கவல்லி காவல்துறையை சேர்ந்தவர்கள் ஆசிரியர் அகஸ்டின் தங்கையாவிடம் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.