#Breaking: 6.73 லட்சத்திற்கு வீடு வாங்க உடனே ஆன்லைனில் விண்ணப்பியுங்கள்!! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

0
123
6.73 Lakh Apply online now to buy a house!! Important announcement issued by the government!

 

சென்னையில் 6.73 லட்சம் ரூபாய்க்கு அழகிய வீட்டை ஆன்லைன் மூலமாக எவ்வாறு வாங்க வேண்டும் என்பது பற்றியும் அதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நகரத்தில் குடிசையில் வாழும் மக்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள், சாலையோரத்தில் வசிக்கும் மக்கள், நலிவடைந்த மக்கள் ஆகியோர் பயன்பெறும் வகையில் 1970ம் ஆண்டு முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் குடிசைப்பகுதி மாற்று வாரியம் என்ற அமைப்பை உருவாக்கினார். ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் மூலமாக தமிழக அரசால் கட்டப்பட்ட வீடுகள் மிகக் குறைந்த விலைக்கு வழங்கப்படுகின்றது.

அந்த வகையில் மத்திய அரசு தமிழகத்தில் 17 ஆயிரத்து 133 கோடி ரூபாய் செலவில் 143696 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு அனுமதி அளித்துள்ளது. அதன்படி கடந்த 2015ம் ஆண்டு முதல் தற்பொழுது வரை 57107 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவியேற்ற பின்னர் குடிசை பகுதி மாற்று வாரியம் என்ற அமைப்பை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயரை மாற்றப்பட்டது.

முதல்வர் முக. ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற பின்னர் மட்டுமே கடந்த மூன்று. ஆண்டுகளில் 29439 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் 2025ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 79094 வீடுகள் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது தமிழக அரசு தமிழக நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் மூலமாக 22049 வீடுகளை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடிசை பகுதிகளில் வசிப்பவர்கள், அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்கள் அதாவது நீர்நிலைகள், நீர் தேங்கும் இடங்கள், கடலோர பகுதிகள், பேரிடர் பகுதிகள் போன்ற அபாயம் நிறைந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் சாலையோரத்தில் வசிப்பவர்களும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கும் இந்த திட்டத்தில் குடியிருப்புகளை பெறுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

அதன்படி இந்த திட்டத்தில் வீடு வாங்கவேண்டும் என்று நினைக்கும் மக்கள் முதல் தவணையாக குறைந்த பட்சம் 85000 முதல் அதிகபட்சமாக 10.37 லட்சம் வரை கட்ட வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் வீடூ வாங்கும் மக்களுக்கு மத்திய அரசு 150000 லட்சம் ரூபாயும் மாநில அரசு 7.50 லட்சம் முதல் 13லட்சம் வரையிலும் மானியம் வழங்கப்படும். மீதமுள்ள தொகையை பயனாளிகள் செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலமாக வீடு வாங்க விரும்பும் மக்களின் ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். இந்த அடுக்குமாடி குடியிருப்பை வாங்க விரும்பும் மக்கள் https://tnuhdb.org.in/tnuhdb-hfa-app/ahp-vaccancy.Aspx என்ற இணையதளத்திற்கு சென்று அப்ளை என்பதை கிளிக் செய்து எளிமையாக விண்ணப்பிக்கலாம்.

இந்த இணையதளத்தில் இந்த திட்டம் குறித்த அனைத்து தகவல்களும் இருக்கும். அதாவது இந்த திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்பு பெறுவதற்கு எவ்வளவு தொகை செலுத்த வேண்டும், எத்தனை வீடுகள் உள்ளது என்பது தொடர்பான அனைத்து தகவல்களும் இருக்கும்.

இந்த திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்பு பெறுவதற்கு எங்கும் எங்களுக்கு வீடு இல்லை என்ற உறுதி மொழி பத்திரத்துடன் 3 லட்சத்திற்கு குறைவாக உள்ள குடும்ப வருமான சான்றிதழ், குடும்பத் தலைவன் மற்றும் தலைவி ஆகியோருடைய புகைப்படங்கள், ஆதார் எண், ரேஷன் கார்டு, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் விவரங்கள் போன்ற ஆவணங்களை மக்கள் சமர்பிக்க வேண்டும்.

தேவையான ஆவணங்களை கொண்டு விண்ணப்பத்தை அளித்தால் அரசு பரிசீலனை செய்து அடுக்குமாடி குடியிருப்புகளை முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும். அதன் பின்னர் 90 நாட்கள் கழிந்து வீட்டுக்கு தொகையை செலுத்தலாம். அதே போல 5 ஆண்டுகள் கழிந்து தமிழக அரசே அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கிய நபர்களின் பெயரில் பத்திரத்தை பதிவு செய்து தரும்.

இந்த திட்டத்தின் கீழ் சென்னையில் மணலி புதுநகர் திட்டம் 2 மூலமாக 10.37 லட்சம் மதிப்பிலான 6 வீடுகளும் மணலி புதுநகர் திட்டம் 7 மூலமாக 6.73 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட 200 வீடுகளும் கட்டப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டில் 6.16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 282 வீடுகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் 6532 வீடுகளும் கட்டப்பட்டுள்ளது.

சென்னையில் 400 சதுர அடி கொண்ட வீட்டை வாங்குவதே பெரும் கஷ்டமான காரியமாக இருக்கும் நிலையில் தமிழக அரசு ஒரு படுக்கையறை, சமையலறை, கழிவறை ஒரு ஹால், குளியலறை ஆகியவை அடங்கிய ஒரு அடுக்குமாடி குடியிருப்பை 6.73 லட்சத்திற்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக குறைந்த விலையில் விற்பனை செய்யவுள்ளது. எனவே மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.