Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிக்பாஸ் வீட்டில் தனியாக பிரித்துவிடப்பட்ட 6 போட்டியாளர்கள்!!! இனி நீங்கதான் இந்த வேலைகளை செய்யனும்னு பிக்பாஸ் கட்டளை!!!

#image_title

பிக்பாஸ் வீட்டில் தனியாக பிரித்துவிடப்பட்ட 6 போட்டியாளர்கள்!!! இனி நீங்கதான் இந்த வேலைகளை செய்யனும்னு பிக்பாஸ் கட்டளை!!!

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோ தற்பொழுது வெளியாகியுள்ள நிலையில் அதில் 6 போட்டியாளர்கள் மட்டும் இரண்டாவது வீட்டுக்குள் பிரித்துவிடப்பட்டுள்ளனர். மேலும் இவர்களுக்கு புதிய விதிமுறைகளையும் பிக்பாஸ் கொடுத்துள்ளார்.

இன்று(அக்டோபர்7) வெளியான இரண்டாவது புரோமோ வீடியோவில் பிக்பாஸ் அவர்கள் தனியாக பிரித்து விடப்பட்ட ஆறு போட்டியாளர்களுக்கும் “பிக்பாஸ் வீட்டின் கேப்டனால் ஒவ்வொரு வாரமும் ஆறு போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பிக்பாஸ் இரண்டாவது வீட்டுக்கு அதாவது ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இந்த ஸ்மால் பாஸ் வீட்டில் வசிக்கும் போட்டியாளர்கள் அனைவரும் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லக் கூடாது. எந்த டாஸ்கிலும் பங்கு பெறவோ அல்லது ஷாப்பிங் செய்யவோ முடியாது. மேலும் ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் நபர்கள் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் வரை பிக்பாஸ் பேசமாட்டார். ஸ்டால் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் தான் உணவு வகைகளை முடிவு செய்வார்கள். ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் நபர்கள் பாத்ரூம் மற்றும் கிளீனிங் வேலைகளை செய்ய வேண்டும்” என்று பிக்பாஸ் கூறியுள்ளார்.

இந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு நிக்சன், வினுஷா, ரவீனா, செல்லதுரை, அனன்யா, ஐஸ்ஷு ஆகிய ஆறு போட்டியாளர்கள் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் மூன்றாவது புரோமோவுக்கு பிக்பாஸ் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Exit mobile version