6 நாட்கள் ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பு!! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

0
168
6 days menstrual leave with pay!! Sudden announcement issued by the government!!
கர்நாடக மாநிலத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு 6 நாட்கள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு அளிக்கப்படும் என்று தற்பொழுது புதிய திட்டம் ஒன்றை கர்நாடக அரசு கொண்டுவந்துள்ளது.
இந்தியாவில் பல மாநிலங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. முக்கியமாக தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய், இலவச பேருந்து பயணம், சுய தொழில் தொடங்க நிதியுதவி, உயர்கல்வி பயில ஊக்கத் தொகை என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதே போல தற்பொழுது மற்ற மாநிலங்களிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பல நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் கர்நாடக அரசும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. தமிழகத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் 1000 ரூபாய் போலவே கர்நாடகத்திலும் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இதைப் போலவே பெண்களுக்காக புதிய திட்டம் ஒன்றை கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் நாட்களில் அவர்களுக்கு வயிற்று வலி, உடல் சோர்வை என்று பல உடல்நலப் பிரச்சனைகள் இருக்கும். இதைத் தாங்கிக் கொண்டு பெண்கள் வேலைக்கும் சென்று வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் வலியை குறைக்கும் விதமாக கர்நாடக அரசு தற்பொழுது 6 நாட்கள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு அளிக்கும் திட்டத்தை கொண்டுவரவுள்ளதாக கூறியுள்ளது.
மாதவிடாய் விடுமுறை அளிப்பது குறித்து ஆய்வு செய்வதற்காக மருத்துவர் சப்னா முகர்ஜி அவர்களின் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு நடத்திய ஆய்வின் முடிவில் இந்த குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு 6 நாட்கள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இந்த அறிக்கை குறித்து கர்நாடக மாநிலத்தின் தொழில்துறை செயலாளர் முகமது மொஹ்சின் அவர்கள் “வேலைக்கு செல்லும் பெண்களுக்கு 6 நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று ஆய்வுக் குழு கூறியுள்ளது. முதலில் இது குறித்து அனைத்து துறைகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதன் பின்னர் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் பெறுவதற்கு சட்டப் பேரவையில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு 6 நாட்கள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை திட்டம் முதலில் தனியார் நிறுவனங்களில் அமல்படுத்தப்படும். பின்னர் அரசு துறைகளில் இந்த திட்டம் கட்டாயமாக்கப்படும். உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் பேசியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக உச்சநீதிமன்றத்தில் மாதவிடாய் காலங்களில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயமாக விடுமுறை அளிக்க வேண்டும் என்ற வழக்கு விசாரணையில் இருந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் “இந்த வழக்கில் எங்களால் எதுவும் கூற முடியாது. இது அரசின் கொள்கையை சேர்ந்தது என்பதால் மத்திய தொழில் துறை இதுகுறித்து முடிவு எடுக்கலாம்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.