Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டிப்பர் லாரி மோதியதில் 6 பேர் பலி!! சாலையை கடக்க முயன்றவர்களுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்!!

6 killed in tipper truck collision!! A horrible incident happened to those trying to cross the road!!

6 killed in tipper truck collision!! A horrible incident happened to those trying to cross the road!!

டிப்பர் லாரி மோதியதில் 6 பேர் பலி!! சாலையை கடக்க முயன்றவர்களுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்!! 

சாலையை கடக்க முயற்சி செய்தபோது டிப்பர் லாரி ஒன்று மோதியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பதைபதைக்க  வைக்கும் இந்த கொடூர நிகழ்வு செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. செங்கல்பட்டு  மாவட்டத்தில் உள்ள பொத்தேரி என்ற பகுதியில் சென்னை – திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையை கடப்பதற்காக மக்கள் முயற்சி செய்தபோது அந்த வழியே வேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று அவர்கள் மீது மோதியது.

இந்த கொடூர விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்தவர்கள் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த கோர விபத்தை ஏற்படுத்திய லாரியை ஓட்டுநர் அங்கேயே நிறுத்திவிட்டு தப்பியோடியதால் அந்த பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் இந்த விபத்து குறித்து அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் நிவாரணமும் அறிவித்துள்ளார். அதன்படி இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும் அதே போல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பார்த்தசாரதி என்பவருக்கு ரூபாய் 50,000 நிதி உதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version