6 லட்சம் தடுப்பூசி 6 கோடி மக்களுக்கு! இது எப்படி சாத்தியமாகும்? சுகாதரத்துறை செயலாளர் வெளியிட்ட தகவல்!

0
160
Corona vaccine coming home search! Tamil Nadu government's next update!

6 லட்சம் தடுப்பூசி 6 கோடி மக்களுக்கு! இது எப்படி சாத்தியமாகும்? சுகாதரத்துறை செயலாளர் வெளியிட்ட தகவல்!

கொரோனா தொற்றினால் மக்கள் பாதிப்படைந்து தற்பொழுது தான் மீண்டு வருவதற்கு முயற்சி செய்து வருகின்றனர்.இந்நிலையில் மக்கள் பல கட்டுபாட்டு வழிமுறைகளை பின்பற்றுமாறு தொடர்ந்து அரசாங்கம் கூறி வருகின்றனர்.மேலும் மக்கள் அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்திகொள்ளுமாறு கூறியுள்ளனர்.

இன்று மருத்துவ கல்லூரிகள் திறந்துள்ளதால் நேரில் சென்று சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வில் மாணவர்கள் அனைவரும் கூறிய நடவடிக்கைகளை கடைபிடிக்கிறார்களா என்று கண்காணித்தார்.அதில் மாணவர்கள் முகக்கவசம் கொண்டு வர வில்லை என்றால் கல்லூரிகளே வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.மேலும் மாணவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும்.இல்லயென்றால் கட்டாயம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை எடுத்திருக்க வேண்டும் என்று கூறினார்.

சென்னையில் கொரோனா தொற்று தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது என்று கூறினார்.திருமணக நிகழ்வுகள் மற்றும் மற்ற நிகழ்வுகளில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்ப்பது சற்று சிரமமாகவே உள்ளது என கூறினார்.அதனால் சென்னை,காஞ்சிபுரம்,தஞ்சை,திருவாரூர்,நாகை போன்ற மாவட்டங்களில் கண்காணிப்பு தீவீரப்படுத்தப்பட்டுள்ளது.கொரோனா தொற்றானது குறைந்து காணப்படும் மாவட்டத்தில் அதிகப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டு மேலும் குறைக்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

கேரளா மாநிலத்தில் தற்போது கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தீவீரமாக உள்ளது.அதனால் கேரளா தமிழ்நாட்டு எல்லையில் கண்காணிப்பை தீவீரப்படுத்தியுள்ளோம் என்று கூறினார்.அடுத்த அலையில் தமிழ்நாட்டு மக்கள் தங்களை காத்துக்கொள்ள கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.அதேபோல பொதுமக்கள் தேவையான காரணங்களுக்கு மட்டுமே வெளியே செல்ல வேண்டும்.தேவையற்ற காரணங்களுக்காக வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.தற்பொழுது நமது தமிழ்நாட்டில் 6 லட்சம் தடுப்பூசி மட்டுமே கையிருப்பில் உள்ளது.ஆனால் தற்போது வரை 6 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளது என்றார்.தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டாலும் தடுப்பூசி உள்ளவரை மக்கள் தற்போது போட்டுக்கொள்ளலாம் என்றும் கூறினார்.