இன்று பலர் உடல் எடை அதிகரிப்பின் காரணமாக மூச்சு திணறல்,மாரடைப்பு,சர்க்கரை போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.உடல் எடை அதிகரித்து விட்டால் எந்த வேலை செய்வதிலும்
சிரமம் ஏற்படும்.எனவே உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க முயலுங்கள்.
1)எலுமிச்சை சாறு
2)வெதுவெதுப்பான நீர்
ஒரு கிண்ணத்தில் வெதுவெதுப்பான நீர் தேவையான அளவு ஊற்றி இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ஒரே வாரத்தில் உடல் எடை குறைந்துவிடும்.எலுமிச்சையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது.
1)ஓமம்
2)தண்ணீர்
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி ஓமம் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் கொலஸ்ட்ரால் குறையும்.ஓமத்தில் உள்ள நார்ச்சத்து மற்றும் பிற சத்துக்கள் உடல் கொழுப்பை கரைக்க உதவுகிறது.
1)கறிவேப்பிலை
2)தண்ணீர்
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உடல் எடை குறையும்.
1)இஞ்சி
2)தேன்
ஒரு கிளாஸ் சூடான நீரில் இரண்டு தேக்கரண்டி இஞ்சி சாறு சேர்த்து கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடித்தால் ஒரே வாரத்தில் உடல் எடை கடகடன்னு குறைந்துவிடும்.
1)சோம்பு
2)தண்ணீர்
ஒரு கிளாஸ் அளவு நீரில் 1/4 தேக்கரண்டி சோம்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.
1)நெய்
2)தண்ணீர்
தினமும் காலையில் எழுந்த உடன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 1/4 தேக்கரண்டி நெய் சேர்த்து பருகி வந்தால் கூடிய விரைவில் உடல் எடை குறையும்.
1)இலவங்கபட்டை பொடி
2)தண்ணீர்
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 1/4 தேக்கரண்டி இலவங்கப்பட்டை பொடி சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்துவிடும்.