Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பரிதாப பலி! அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதல்!

6 members of the same family die tragically! Government bus and car face to face collision!

6 members of the same family die tragically! Government bus and car face to face collision!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பரிதாப பலி! அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதல்!

சென்னையைச் சேர்ந்த எபினேசர் இமாம் 22 வயதான இவர் மற்றும் இவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் அந்த காரின் மூலம் ஊட்டி சென்று திரும்பியுள்ளனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி அருகே தியாகத் துருகம் அருகில் அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் காரில் இருந்த 6 பேரும் பலியாகி விட்டனர்.

சென்னையிலிருந்து அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலம் வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை அழகு ராஜன் என்ற 40 வயதான நபர் செலுத்தினார். தியாக துருகம் அருகே புறவழிச்சாலையில் வந்தபோது, ஊட்டியில் இருந்து திரும்பிய கார் மற்றும் அதன் உள்ளிருந்த ஆறுபேரும், எதிர்பாராதவிதமாக அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் பஸ்சின் முன்பகுதி அடியில் கார் சென்று விட்டது. அதன் பின் பல அடி தூரம் இழுத்து வந்து அதன் பின் பாள்ளத்தில் மோதி பின் பேருந்து நின்றது. இந்த தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியினர் மூலம் காரில் இருந்தவர்களை மீட்டனர். ஆனால் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். எனவே அவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். மேலும் அரசு பேருந்தில் பயணித்த 5 பயணிகளுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version