Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்திய 6 பாகிஸ்தானியர்கள் கைது!!

#image_title

ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்திய 6 பாகிஸ்தானியர்கள் கைது!!

குஜராத் மாநிலம் போர்பந்தரில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக பல்வேறு தரப்புகளில் இருந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. அத்தகவலின்படி, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் குஜராத் கடற்கரை பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருப்பட்டுள்ளனர். அந்த சோதனையின் போது போர்பந்தர் துறைமுகம் பகுதியில் சுமார் ரூ.480 கோடி மதிப்புள்ள 80 கிலோ எடை கொண்ட போதை பொருட்கள் பிடிப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த போதைப்பொருட்களை படகில் கடத்த முயன்ற பாகிஸ்தான் நாட்டினை சேர்ந்த 6 பேரையும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அண்மை காலமாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவது பெருமளவில் அதிகரித்து வருகிறது என்று தொடர்ந்து செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்திய எல்லைக்குள் போதைப்பொருட்கள் பாகிஸ்தானில் இருந்து கடல் மார்க்கமாகவும், வான்வழி மார்க்கமாகவும், சாலை மார்க்கமாகவும் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் நோக்கில் இந்திய கடற்படை 24 மணிநேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை கடந்த 3 ஆண்டுகளில் கடல்வழியே கடத்த முயன்ற ரூ.3,135 கோடி மதிப்புள்ள சுமார் 517 கிலோ எடை கொண்ட போதைப்பொருட்கள் ஏடிஎஸ், என்சிபி மற்றும் கடலோர காவல்படை உள்ளிட்டோரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் குஜராத் மாநிலத்தில் கடந்த 30 நாட்களுள் 2வது முறையாக ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி படகு மூலம் சுமார் 3,300 கிலோ எடைகொண்ட ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, தற்போது கைது செய்யப்பட்ட 6 பாகிஸ்தானியர்களை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

Exit mobile version