Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த வீடு.. குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் பலி.. தெலுங்கானாவில் நடந்த சோகம்..!

நள்ளிரவில் வீடு தீப்பற்றி எரிந்ததில் குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் மஞ்ரியல் மாவட்டம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணபுரம் கிராமத்தில் சிவையா மற்றும் அவரது மனைவி பத்மபதியா தனியே வசித்து வந்துள்ளனர். இவர்களது வீட்டிற்கு அவர்களது உறவினர்களான சந்தையா (40), மௌனிகா (35) தங்களது குழந்தைகளான ஸ்வீட்டி (4), ஹீம பிந்து (2) ஆகியோருடன் வந்திருந்தனர்.

இரவு உணவு முடித்த அவர்கள் படுத்து உறங்கியுள்ளனர். இதற்கிடையில், தீடிரென நள்ளிரவில் வீடு தீப்பற்றி எரிந்தது. அருகில் இருந்தவர்கள் தீயை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கதினர் தீயை அணைக்க முயன்றனர். அதற்குள்ளாகவே தீ முழுவதும் பரவியது வீட்டில் இருந்த குழந்தைகள் உள்ளிட்ட ஆறு பேரும் தீயில் கருகி பலியானர்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் தீயணைப்புத்துறையினருடன் வந்து தீயை அணைத்தனர். அவர்களின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டில் தூங்கி கொண்டிருந்த நேரம் யாரேனும் தீவைத்து விட்டு சென்றார்களா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version