Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெரம்பலூர் மாவட்டம் கல்லை வேப்பூர் அருகே நடந்த கோர விபத்து! 5 பேர் பலி!

வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பரமேஸ்வரி என்பவர் அவருடைய குழந்தைகள் செந்நிலவன் , தமிழ்நிலா, அவருடைய உறவினரின் குழந்தை நந்திதா, அவருடைய தாய் தனம் சகோதரர் சக்திவேல் போன்றோருடன் இருசக்கர வாகனத்தில் போய்க்கொண்டிருந்தார்.

இருசக்கர வாகனத்தில் பெரம்பலூர் மாவட்டம் கொளப்படியில் இருந்து வேப்பூர் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார்கள் .அவர்கள் கல்லாங்காடு என்ற இடத்தில் போய்க் கொண்டிருந்த சமயத்தில், வேகமாக வந்த கார் ஒன்று அந்த இரு சக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தவர்கள் தூக்கி எறியப்பட்டனர்.

இந்த விபத்தில் பரமேஸ்வரி, அவருடைய குழந்தை செந்நிலா, அவர் உறவினர் உடைய குழந்தை நந்திதா, ஆகிய மூன்று பெரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள். மற்ற மூன்று பேரும் படுகாயம் அடைந்து இருக்கிறார்கள். அருகில் இருந்தவர்கள் அவர்களை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கே பரமேஸ்வரியின் தாய் தினம் மரணமடைந்தார் இதனைத்தொடர்ந்து சக்திவேல் மற்றொரு குழந்தை தமிழ்நிலா போன்றோர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

அங்கு சக்திவேல் அவர்களும் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார். குழந்தை தமிழ் நிலாவிற்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள் அதேபோல அந்த காரை ஓட்டி வந்த சரவணன் என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Exit mobile version