Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தீபாவளி சமயத்தில் பணம் சம்பாதிக்க 6 முத்தான வழிகள்!!

#image_title

தீபாவளி சமயத்தில் பணம் சம்பாதிக்க 6 முத்தான வழிகள்!!

திறமையும், பொறுமையும் இருந்தால் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். அந்த வகையில் வர தீபாவளி சமயத்தில் என்ன மாதிரி தொழில் செய்தால் பணம் பார்க்க முடியும் என்பது குறித்த யோசனை வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் எந்த தொழில் உங்களுக்கு செட் ஆகுமோ அதை முயற்சித்து லாபம் ஈட்ட வாழ்த்துக்கள்.

ஐடியா 1:

தீபாவளி என்றாலே பலகாரம் தான். அனைவருது வீட்டிலும் இந்த பலகாரம் செய்வது வழக்கம். ஆனால் வேலைக்கு செல்லும் பெண்கள், பலகாரம் செய்யத் தெரியாதவர்கள் இருந்தால் அவர்களிடம் தீபாவளி பலகாரத்திற்கான ஆர்டர் பிடித்து விட வேண்டும். இதனால் யாருக்கு, எவ்வளவு பலகாரம் செய்ய வேண்டும் என்பதை முன் கூட்டியே அறிந்து கொள்ள முடிவதால் தேவையான அளவு பலகாரம் செய்து கொடுத்து ஈஸியாக லாபம் பார்க்க முடியும். இதனால் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இல்லை.

ஐடியா 2:

தீபாவளி அன்று அனைவரது வீட்டிலும் சிக்கன், மட்டன் எடுக்கும் வழக்கம் இருக்கும். ஆனால் சிலருக்கு அசைவம் சமைக்க தெரியாமல் இருக்கும், ஒரு சிலர் பேச்சுலராக இருப்பார்கள். இது போன்றவர்களிடம் முன் கூட்டியே ஆர்டர் பிடித்து பிரியாணி, மட்டன் உணவு, சிக்கன் உணவு, பிஸ் உள்ளிட்ட அசைவ ஐட்டங்களை டெலிவரி செய்யலாம். இதன் மூலம் நல்ல லாபம் பார்க்க முடியும்.

ஐடியா 3:

தீபாவளி அன்று புது துணி உடுத்துவத்தை நம் இந்தியர்கள் வழக்கமாக கொண்டுள்ளோம். அந்த வகையில் சுடி, பேண்ட், புடவை, நைட்டி, குழந்தைகளுக்கான துணி உள்ளிட்டவைகளை மொத்த விலைக்கு வாங்கி விற்பனை செய்யலாம். இதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.

ஐடியா 4:

பெண்கள், குழந்தைகள் துணிக்கு ஏற்றவாறு நகை அணிவதை விரும்புவார்கள். அந்த வகையில் கவரிங் நகை, மேட்சிங் ஜுவல்ஸ் உள்ளிட்டவைகளை மொத்த விலைக்கு வாங்கி விற்பனை செய்யலாம். இதன் மூலம் நல்ல லாபம் பார்க்க முடியும்.

ஐடியா 5:

பட்டாசு இல்லாத தீபாவளி கிடையாது. அந்த வகையில் மொத்தமாக பாட்டாசு வாங்கி விற்பனை செய்யலாம். அரசு உத்தரவு படி பசுமை பட்டாசு வாங்கி விற்பனை செய்தால் நல்ல லாபம் பார்க்க முடியும்.

ஐடியா 6:

உங்களுக்கு தையல் கலை தெரியும் என்றால் புதிய ஆடைகளை ஆல்ட்ரேஷன் செய்து கொடுத்து அதிக பணம் சம்பாதிக்கலாம்.

Exit mobile version