Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

6 வருடங்கள் கிரிக்கெட் வீரருடன் காதல்!! பொன்னியின் செல்வன் பட நடிகை ஓபன் டாக்!!

New change in the cabinet, Chief Minister Stalin, DMK, ADMK

New change in the cabinet, Chief Minister Stalin, DMK, ADMK

6 வருடங்கள் கிரிக்கெட் வீரருடன் காதல்!! பொன்னியின் செல்வன் பட நடிகை ஓபன் டாக்!!
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி அவர்கள் 6 வருடங்களாக கிரிக்கெட் வீரருடன் காதலில் இருந்ததாக கூறியுள்ளார்.
கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன் திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகையாக மாறியவர் நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி. நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி அவர்கள் ஜகமே தந்திரம், ஆக்சன், கார்கி, கேப்டன் ஆகிய தமிழ் படங்கிளில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது காதல் அனுபவம் குறித்து கூறியுள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில், “நான் 6ம் வகுப்பு படிப்பதில் இருந்து 12ம் வகுப்பு வரை இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் அவர்களை மனதிற்குள் காதலித்து வந்தேன். அதன் பின் அந்த காதல் மாறிவிட்டது. இப்போது எனக்கு கிரிக்கெட் பார்க்க நேரமே இல்லை. யுவராஜ் சிங் அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று பேட்டியளித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் அர்ஜூன் தாஸ் அவர்களுடன் இவர் பதிவிட்ட புகைப்படம் இணையத்தில் மிகவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.
Exit mobile version