உலக அளவில் 600 கோடி ரூபாய் வசூல்!!! தொடர்ந்து சாதனை படைத்து வரும் ஜவான் திரைப்படம்!!!

0
93
#image_title

உலக அளவில் 600 கோடி ரூபாய் வசூல்!!! தொடர்ந்து சாதனை படைத்து வரும் ஜவான் திரைப்படம்!!!

நடிகர் ஷாரூக் கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் உலக அளவில் 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி ஜவான் திரைப்படம் வெளியானது. ஜவான் திரைப்படத்தை இயக்குநர் அட்லி இயக்கியுள்ளார். ஜவான் திரைப்படத்தில் நயன்தாரா, பிரியாமணி, சஞ்சய் தத், தீபிகா படுகோன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஜவான் திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே 129 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. இதையடுத்து நேற்று(செப்டம்பர்12) ஜவான் திரைப்படத்தின் ஐந்தாவது நாள் வசூல் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன்படி ஜவான் திரூப்படம் வெளியான 5 நாட்களில் 574 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது.

இதன் மூலமாக ஒரு வருடத்தில் இரண்டு 500 கோடி ரூபாய் வசூல் செய்த திரைப்படங்களில் நடித்த ஒரே நடிகர் என்ற பெருமையை நடிகர் ஷாரூக் கான் அவர்கள் படைத்துள்ளார். இந்நிலையில் ஜவான் திரைப்படத்தின் ஆறாவது நாள் வசூல் பற்றிய அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி நடிகர் ஷாரூக்கான் அவர்கள் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் 6 நாட்களில் 621.12 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்நிலையில் ஜவான் திரைப்படம் பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகம் லாபம் பார்த்துள்ளது. ஜவான் திரைப்படத்தின் பட்ஜெட் 300 கோடி ஆகும்.

ஜவான் படத்தின் வசூலை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சலார் திரைப்படத்தின் ரிலீஸும் செப்டம்பர் 28ம் தேதியில் இருந்து தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஜவான் திரைப்படத்தின் வசூல் 1000 கோடி ரூபாயை தாண்டி பாலிவுட் சினிமாவில் புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.