Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிக வட்டி தருவதாக கூறி 6000 கோடி ரூபாய் மோசடி! IFSன் முக்கிய தரகர் கைது!

#image_title

அதிக வட்டி தருவதாக கூறிய 6000 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் ஐஎஃப்எஸ் நிறுவனத்தின் முக்கிய தரகரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நிறுவனத்தைச் சேர்ந்த நான்காவது தரகரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹரிகரனிடம் அமலாக்கத்துறையினர் நேற்று முன்தினம் விசாரணை துவக்கியது குறிப்பிடத்தக்கது.

ஐஏஎஸ் ஐபிஎஸ் குடியிருப்பில் வசித்து கொண்டு கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிகத்தை வட்டி தருவதாக மோசடி செய்யும் நிறுவனங்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிறுவனம் தொடர்பாக தொடர்ந்து இயக்குனர்களையும் தரகர்களையும் அடுத்தடுத்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நிறுவனம் தொடர்பான சொத்துக்களையும் வங்கி கணக்குகளையும் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் முடக்கி வருகின்றனர்.

LNS நிறுவனத்தை தொடங்கி ஐ எஃப் எஸ் என்ற பெயரில் 84000 நபர்களிடம் இருந்து சுமார் 6000 கோடி முதலீடு பெற்று ஏமாற்றியதில். LNS, IFS மற்றும் 5 துணை நிறுவனங்களில் மொத்தம் 19 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு இதில் மூன்று பேரை பொருளாதார குற்றப்பிரிவு கைது செய்து உள்ளனர்.

குற்றவாளிகள் தொடர்புடைய 31 இடங்களில் சோதனை செய்து 1.12 கோடியும் தங்கம் மற்றும் வெள்ளி ((பொருட்கள் 34 லட்சம்)) 16 கார்கள் குற்றவாளிகள் சொந்தமான 49 அசையாத சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி விவகாரத்தில் முக்கிய தரகரான ஹரிஹரன் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தற்போது கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹரிஹரன் முக்கிய இயக்குனர்களுக்கு அடுத்தபடியாக தரகராக செயல்பட்டு ஆயிரக்கணக்கான மக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக வசூல் செய்த பணத்தை சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்த விவகாரம் தொடர்பாக அமலாக்க துறையினர் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த அடிப்படையில் விருகம்பாக்கத்தில் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு இருந்து வந்த ஹரிகரனிடம் இரண்டு தினங்களுக்கு முன்பு அமலாக்க துறையினர் விசாரணையை துவக்கியுள்ளனர்.

இந்த நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹரிகரன் எவ்வளவு பேரிடம் பணத்தை வசூல் செய்து அந்த பணத்தை சட்டவிரோதமாக எங்கெல்லாம் பதுக்கி வைத்துள்ளார் என்பது குறித்து எல்லாம் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய தரகர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், ஐ எஃப் எஸ் நிறுவனத்தின் முக்கிய இயக்குனர்கள் வெளிநாடு தப்பி சென்று உள்ளதால் அவர்களுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரவாக பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மோசடி நபர் ஆன ஹரிகரன் எவ்வாறு ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு வாடகைக்கு வந்தார் யாருடைய வீட்டில் வாடகைக்கு இருக்கிறார் என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.

குறிப்பாக ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரியின் பெயரை பயன்படுத்தி இது போன்ற மோசடியில் ஈடுபட்டாரா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version