6000 மெகாவாட் சோலார் மின் உற்பத்தி!! தமிழக அரசின் திட்டம்!!

0
211
6000 MW solar power generation!! Tamilnadu government project!!

6000 மெகாவாட் சோலார் மின் உற்பத்தி!! தமிழக அரசின் திட்டம்!!

தமிழக அரசு சூரிய சக்தி மூலம் 6000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது. மக்கள் தொகை பெருக்கம், மின் உற்பத்தி  பொருட்களுக்கான, மூல பொருட்கள் தட்டுப்பாடு, உற்பத்தி பொருட்களின் அதிக விலை போன்ற காரணங்களினால் தேவையான அளவு மின் உற்பத்தி செய்ய முடிவதில்லை.

அதனால் பசுமை மின் திட்டத்தில் சோலார் மின் உற்பத்தியை, அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கி அதன் மூலம் அதிக மின்சாரம் தயாரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள புறம்போக்கு நிலங்களை கையகப்படுத்த அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் 2021ம் ஆண்டே அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக செங்கல்பட்டு, ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், சேலம், திருவாரூர் என ஆறு மாவட்டங்களில் 4023 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப் பட்டுள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கு, முதலீட்டார்களை ஈர்க்கவும் தமிழக அரசு திட்டம் தீட்டியுள்ளது.

இதற்கான திட்ட அறிக்கையை மின்சார வாரியம் வழங்கியுள்ளது. இந்த திட்டம் நடைமுறையில் வந்தால் 6000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என  கூறப்படுகிறது. இந்த திட்டத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இத்திட்டத்திற்கான முதல் சூரிய சக்தி பூங்கா திருவாரூரில் அமைக்கப்பட உள்ளது. சூரிய சக்தி மூலமும், காற்றாலை மூலமும் மத்திய அரசு அறிவித்துள்ள 49% மின் உற்பத்தியை 2030க்குள் எட்டமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இலக்கை அடையும் பட்சத்தில் நிலக்கரி மற்றும் தெர்மல் பிளான்ட் மூலம் ஏற்படும் சுற்றுசூழல் மாசில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.