Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெற்றிக்கரமாக நடைபெற்ற 65 வது ஆண்டின் இந்து தர்ம பரிபாலன சபை!!

65th Paripalana Sabha held successfully!! தலைவர் எல்.ஆர்.சி.இராஜசேகர் தலைமை வகித்தார் 1959 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்து தர்ம பரிபாலன சபையின் 65 வது ஆண்டு செயற்குழு கூட்டம் தொண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கே.எஸ்.கே.ஜென்னத் மகாலில் நடைபெற்றது. இந்து தர்ம பரிபாலன சபை கூட்டத்திற்கு தலைவர் எல்.ஆர்.சி.இராஜசேகர் தலைமை வகித்தார். செயலாளர் மணிமாறன், பொருளாளர் பாலசுப்பிரமணியம், துணைத்தலைவர் இராஜேந்திரன், முன்னாள் தலைவர் பாலசுப்ரமணியம் மற்றும் எம்.ஆர்.பட்டினம், பி.வி.பட்டினம், வடவயல், காந்திநகர், சின்னத்தொண்டி, படையாட்சி தெரு, மகாசக்திபுரம், அண்ணாநகர், புதுக்குடி, வெள்ளாளர் சொசைட்டி, ஆசாரி தெரு, டி.புதுக்குடி, நவக்குடி, புடனவயல், பெருமானேந்தல், காமராஜர் நகர், விளத்துமனக்கோட்டை, நரிக்குடி, தெற்குத்தோப்பு, வெள்ளை மணல் தெரு, ஜே.ஜே.நகர், வள்ளுவர் நகர், சலவை தொழிலாளர் சங்கம், மருத்துவர் சங்கம் ஆகிய நிர்வாகங்களின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் சமூகப் பெரியோர்கள் முன்னிலையில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் தொண்டி அருள்மிகு சிவகாமி உடனுறை சிதம்பரேஸ்வரர் ஆலய திருப்பணி பற்றிய விவரங்கள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், இந்த கூட்டத்தில் கடந்த காலங்களைப் போல சாதி, மத பாகுபாடுகள் இல்லாமல் ஊரின் அமைதிக்கும், ஒற்றுமைக்கும் இந்த அமைப்பு தொடர்ந்து பாடுபட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படும் ஆலய வழிபாட்டு முறைகளை கடைபிடிக்க நமது இந்து தர்ம பரிபாலன் சபை ஆலயங்களுக்கு ஒத்துழைப்பு செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 65 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இந்து தர்ம பரிபாலன் சபை சார்பாக ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் இந்து தர்ம பரிபாலன் சபையின் துணைத் தலைவர் இராஜேந்திரன் நன்றி கூறினார்.

65th Paripalana Sabha held successfully!! brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

தொண்டியில் இந்து தர்ம பரிபாலன சபையின் 65 வது ஆண்டு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

1959 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்து தர்ம பரிபாலன சபையின் 65 வது ஆண்டு செயற்குழு கூட்டம்  தொண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கே.எஸ்.கே.ஜென்னத் மகாலில் நடைபெற்றது. இந்து தர்ம பரிபாலன சபை கூட்டத்திற்கு தலைவர் எல்.ஆர்.சி.இராஜசேகர்  தலைமை வகித்தார். செயலாளர் மணிமாறன், பொருளாளர் பாலசுப்பிரமணியம், துணைத்தலைவர் இராஜேந்திரன், முன்னாள் தலைவர் பாலசுப்ரமணியம் மற்றும் எம்.ஆர்.பட்டினம், பி.வி.பட்டினம், வடவயல், காந்திநகர், சின்னத்தொண்டி, படையாட்சி தெரு, மகாசக்திபுரம், அண்ணாநகர், புதுக்குடி, வெள்ளாளர் சொசைட்டி, ஆசாரி தெரு, டி.புதுக்குடி, நவக்குடி, புடனவயல், பெருமானேந்தல், காமராஜர் நகர், விளத்துமனக்கோட்டை, நரிக்குடி, தெற்குத்தோப்பு, வெள்ளை மணல் தெரு, ஜே.ஜே.நகர், வள்ளுவர் நகர், சலவை தொழிலாளர் சங்கம், மருத்துவர் சங்கம் ஆகிய நிர்வாகங்களின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் சமூகப் பெரியோர்கள் முன்னிலையில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் தொண்டி அருள்மிகு சிவகாமி உடனுறை சிதம்பரேஸ்வரர் ஆலய திருப்பணி பற்றிய விவரங்கள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், இந்த கூட்டத்தில் கடந்த காலங்களைப் போல சாதி, மத பாகுபாடுகள் இல்லாமல் ஊரின் அமைதிக்கும், ஒற்றுமைக்கும் இந்த அமைப்பு தொடர்ந்து பாடுபட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படும் ஆலய வழிபாட்டு முறைகளை கடைபிடிக்க நமது இந்து தர்ம பரிபாலன் சபை ஆலயங்களுக்கு ஒத்துழைப்பு செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

65 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இந்து தர்ம பரிபாலன் சபை சார்பாக ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் இந்து தர்ம பரிபாலன் சபையின் துணைத் தலைவர் இராஜேந்திரன்  நன்றி கூறினார்.

Exit mobile version