கோவை போத்தனூரில் 66 வயது ஆன முதியவர் ஒருவர் 16 வயது மட்டுமே ஆன சிறுமியிடம் லவ் லெட்டர் கொடுத்து எனக்கு ஓகே உனக்கு ஓகே வா என கேட்டு இருக்கிறார்.இதனால் அந்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்
கோவையை அடுத்த போத்தனூரில் பஜனை கோவில் தெருவில் வசித்து வந்தார் முகமது பீர் பாசா, 66 வயதான இவர் அதே பகுதியில் 16 வயது மட்டுமே ஆன சிறுமியிடம் லவ் லெட்டர் கொடுத்து எனக்கு உன்னை பிடிக்கிறது உனக்கு ஓகே வா என கேட்டுள்ளார்.
முதியவர் தன்னிடத்தில் நடந்து கொண்டதை சிறுமி வீட்டில் தெரிவித்ததை தொடர்ந்து சிறுமி வீட்டில் இருந்து அந்த முதியவரை கடுமையாக கண்டித்துள்ளனர்.இதற்கெல்லாம் அசையாத அவர் மீண்டும் அந்த சிறுமியை மிரட்டி வந்துள்ளதொடு மட்டுமல்லாமல் தவறான கண்ணோட்டத்தில் சிறுமியை பார்த்துள்ளார்.

இதனால் அந்த சிறுமி வீட்டை விட்டு வருவதை நிறுத்தினார்.இதனால் அந்த சிறுமியின் வீட்டார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த நிலையில் அந்த முதியவரை பொக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
உலகையே உலுக்கி வரும் கொரோனா ஒரு பக்கம் என்றால் இது போன்ற பிரச்சனைகள் ஒரு பக்கம். 60 லுமா ஆசை வரும் என்பதற்கு இச்சம்பவம் எடுத்துக்காட்டாக விளங்குவது வேதனை அளிக்கிறது.