Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 6வது நாளாக ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டும் வங்கக்கடலில் ஏற்பட்ட இருக்கக்கூடிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை மற்றும் அதனை சுற்றிய கூடிய மாவட்டங்களில் கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டு இருக்கின்ற அந்த பகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி முதல் தொடர்ந்து பார்வையிட்டு வருகின்றார்.

இதனை அடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கின்ற நிவாரண முகாமில் வண்டலூர் வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் வசித்து வரும் இருளர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த 33 குடும்பங்களுக்கு கீழ் கோட்டையூர் கிராமத்தில் இருக்கக்கூடிய நிலத்தில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கினார்.

அதோடு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்ற மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார் அதன்பின்னர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த சமயத்தில் வழியில் முதலமைச்சர் ஸ்டாலின் கீழ் கோட்டையூரில் இருக்கக்கூடிய டீக்கடைகள் டீ குடித்து பொதுமக்களிடம் கலந்துரையாடினார் என்று சொல்லப்படுகிறது தொடர்ந்து ஆய்விற்கு செல்லும் வழியில் கண்டிகையில் தூய்மை பணியாளர்களை சந்தித்து நலம் விசாரித்து தேவைப்படும் உதவிகள் தொடர்பாக கேட்டறிந்தார்.

அதோடு காஞ்சிபுரம் மாவட்டம், ஆதனூர், அடையாறு ஆறு துவங்கும் இடம் மற்றும் மண்ணிவாக்கம் அடையாறு ஆற்றுப் பாலத்தின் கனமழையால் ஏற்பட்டிருக்கின்ற நீர்வரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் முடிச்சூர் சிஎஸ்ஐ செயின்ட் பால்ஸ் பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கின்ற நிவாரண முகாம் மற்றும் மருத்துவ முகாமை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்து முடிச்சூர் டோல்கேட் அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார்.

அதோடு முடிச்சூர் மதன புறத்தில் கனமழையின் காரணமாக, சாலைகளில் தேங்கிய மழைநீரில் முதலமைச்சர் ஸ்டாலின் இறங்கி நடந்து வெள்ள நீர் அகற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவை பிறப்பித்தார்.

கடைசியாக தாம்பரம் பேருந்து நிலையத்தில் கனமழையின் காரணமாக, ஏற்பட்ட இருக்கக்கூடிய வெள்ளப் பாதிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்து தூய்மைப் பணியாளர்கள் சந்தித்து நலம் விசாரித்து விட்டு தேவைப்படும் உதவிகள் தொடர்பாக கேட்டறிந்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தாமோ அன்பரசன் மா சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி ஆர் பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் அரவிந்த் ரமேஷ், எஸ். எஸ். பாரதி செல்வப்பெருந்தகை எஸ் ஆர் ராஜா போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே கோபால் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் பி அமுதா செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியாளர் ராகுல் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியாளர் ஆர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தார்கள்.

Exit mobile version