ஜூலை 5 ஆம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு ! தமிழக அரசு உத்தரவு

0
175
TN Assembly-News4 Tamil Online Tamil News1

ஜூலை 5 ஆம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு ! தமிழக அரசு உத்தரவு

தற்போதைய நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வரும் 28 ஆம் தேதியுடன் முடிவடைகிறது இதன் பின்னர் அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்து சேவை தொடங்கப்படும் மற்றும் வேறு எந்தெந்த தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.

தமிழகத்தில் கொரனோ இரண்டாம் அலையின் காரணமாக பாதிப்பு அதிகரித்திருந்த நிலையில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கடந்த மே மாதம் 24 ஆம்  தேதியிலிருந்து 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் பின்னர் இந்த ஊரடங்கு உத்தரவானது ஒரு சில தளர்வுகளுடன் ஒவ்வொரு வாரமாக நீட்டிக்கப்பட்டு வருகிறது

இதனடிப்படையில் தற்போது வரை தமிழகத்தில் ஐந்து முறை இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தற்போது தளர்வுகளுடன் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு வரும் 28 ஆம் தேதி முதல் முடிவடைகிறது.

அந்த வகையில் இன்று நடத்தப்பட்ட ஆலோசனையின் முடிவில் தமிழகத்தில் 6 வது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 28 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள இந்த ஊரடங்கில், கொரோனா பாதிப்பின் அடிப்படையில் 3 வகையாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு அதற்கேற்றவாறு தளர்வுகள் வழங்கப்பட்டன. அந்த அடிப்படையில் தற்போதுள்ள இந்த ஊரடங்கை மேலும் சில தளர்வுகளுடன் வரும் ஜூலை மாதம் 5 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்ய தமிழக அரசு அறிவித்துள்ளது.

வகை 1 – இல் கோயம்புத்தூர்‌, நீலகிரி, திருப்பூர்‌, ஈரோடு, சேலம்‌, கரூர்‌, நாமக்கல்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள்‌ இடம்பெற்றுள்ளது. இந்த மாவட்டங்களில் ஏற்கனவே இருந்த தளர்வுகள் அமலில் இருந்தது.

வகை 2 – இல் அரியலூர்‌, கடலூர்‌, தருமபுரி, திண்டுக்கல்‌, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர்‌, புதுக்கோட்டை, இராமநாதபுரம்‌, இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம்‌, வேலூர்‌ மற்றும்‌ விருதுநகர்‌ ஆகிய 23 மாவட்டங்கள் இடம்பெற்றது.

வகை 3 – இல் சென்னை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் இடம்பெற்றது. வகை 2 மற்றும் வகை 3 மாவட்டங்களை சேர்ந்து பல ஊரடங்கு தளர்வுகள் வழங்கப்பட்டது. இன்று காலை 11 மணியளவில் தமிழக முதல்வருடன் மருத்துவ வல்லுனர் குழு ஆலோசனை மேற்கொண்டது.

இந்த ஆலோசனையில், மருத்துவ வல்லுநர் குழு சார்பாக சிறிய கடைகள், கோவில்கள் திறக்கவும், வகை 2 மற்றும் 3 மாவட்டங்களை இணைந்து பேருந்து போக்குவரத்தை 50 சதவீத பயணிகளுடன் தொடங்க அனுமதி வழங்கவும், வகை 1 இல் உள்ள சில மாவட்டங்களில் மட்டும் மாவட்டங்களுக்கு உள்ளே பேருந்து பயணத்தை அனுமதிக்கவும் பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் ஜூலை 5 ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு மேலும் சில தளர்வுகளுடன் நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.