தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை மட்டும்! இந்த பொருள் வழங்க வேண்டும் அரசு வெளியிட்ட உத்தரவு!
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர் அதனை தொடரந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் முற்றிலும் மூடப்பட்டது.வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.
படிப்படியாக போக்குவரத்து சேவைகளும், பள்ளி மற்றும் கல்லூரிகளும் தொடங்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை அனைத்து வகுப்புகளுக்கும் அரையாண்டு தேர்வு முடிவடைந்து விடுமுறை அழைக்கப்பட்டது.அந்த விடுமுறைகள் முடிவடைந்த நிலையில் கடந்த ஜனவரி 2 ஆம் தேதி தான் மீண்டும் பள்ளிகளில் நேரடி வகுப்பு தொடங்கபட்டது.
அதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் 15 ஆம் தேதி முதல் பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை விடப்பட்டது.மேலும் கடந்த வாரம் மலையின் காரணமாக ஒரு சில மாவட்டங்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது.தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலை இல்லா கணித உபகரண பெட்டிகள் மற்றும் பாடநூல் கழகம் மூலமாக அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றது.
அதனை தற்போது மாணவர்களுக்கு விநியோகம் செய்யலாம் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. விலையில்லா கணித உபகரண பெட்டிகள் மாணவர்களுக்கு வழங்கும் பொழுது புகைப்படம் எடுக்கவேண்டும் அதனை தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு அதன் நகல் ஒன்றை பள்ளிக்கல்வி ஆணையத்திற்கும் அனுப்ப வேண்டும்.
மேலும் அரசு பள்ளிகளில் பயிலும் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கணித உபகரண பெட்டிகள் வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.